இனி அரசு பள்ளிகளில் பகவத் கீதை உபதேசம் கட்டாயம் - அரசு கோரிக்கை
அரசு பள்ளிகளில் பகவத் கீதையை தினமும் உபதேசம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள்
உத்தராகண்ட் மாநில அரசு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், தினமும் காலை பள்ளி கூடும்போது ஒரு கீதை ஸ்லோகம் உபதேசிக்கப்பட வேண்டும்.
கீதையிலிருந்து தினமும் ஒரு வாசகத்தைத் தேர்வு செய்து அதற்கான உரிய விளக்கங்களுடன் மாணவர்கள் மத்தியில் உபதேசிக்கவும். வாரத்துக்கு ஒரு கீதை ஸ்லோகனை தேர்ந்தெடுத்து பள்ளி அறிவிப்பு பலகையில் அதற்கான விளக்கத்துடன் இடம்பெறச் செய்ய வேண்டும்.
பகவத் கீதை உபதேசம்
வார இறுதியில், கீதை ஸ்லோகன் குறித்து மாணவர்களுடன் விவாதித்து, அவர்களது எண்ணங்களைக் கேட்டுப்பெறவும். மாணவர்களின் அறிவு உள்ளிட்டவை அடங்கிய மதிப்புகள் சார்ந்த கல்வி மாதிரியை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய கல்விக் கொள்கை பாடத்திட்டத்தில் பகவத் கீதை, ராமாயணம் உள்ளிட்டவையும் இணைக்கப்பட வேண்டும் என என்.சி.இ.ஆர்.டி.க்கு தாங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.