காதலியை கொன்று குளிர்சாதனப்பெட்டியில் மறைத்து வைத்த காதலன் - நிகழ்ந்தது என்ன?

United States of America Crime Death Texas
By Vinothini Nov 19, 2023 11:12 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 ஒருவர் காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதைப் பொருள்

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் வசித்து வருபவர் ஹெத்தேர் ஸ்சவாபி 35 வயதான இவருக்கு சாட் ஸ்டிவன்ஸ் (வயது 42) என்ற ஆண் நண்பர் இருந்துள்ளார். இவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர், இவர் மீது போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.

bf-killed-his-gf-and-kept-in-fridge-in-texas

இவருக்கும் ஹெத்தேர்-க்கும் இடையே போதைப்பொருள் விவகாரத்தில் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக இருந்து வந்தனர். இது குறித்து ஹெத்தேரின் தாய்க்கு தெரியவர, அவர் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒரு வருடம் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்.

கணவரை கத்தியால் குத்திவிட்டு, 3 குழந்தைகளுடன் மனைவி செய்த காரியம் - அதிர்ச்சி!

கணவரை கத்தியால் குத்திவிட்டு, 3 குழந்தைகளுடன் மனைவி செய்த காரியம் - அதிர்ச்சி!

கொலை

இந்நிலையில், திடீரென ஹெத்தேரை காணவில்லை, இதனால் அவரது தாய் போலீசில் புகாரளித்துள்ளார். போலீசார் கடந்த 5 மாதமாக தேடி வந்தனர். பின்னர், விசாரணையில் அவர் தனது ஆண் நண்பரின் வீடு உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தின் மெக் கென்னடி நகருக்கு குடிபெயர்ந்து வசித்து வந்துள்ளனர்.

bf-killed-his-gf-and-kept-in-fridge-in-texas

காதலரிடம் விசாரித்த போது, காதலி தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். பிறகு அவரது வீட்டை சோதனை செய்தபோது, கதவுக்கு பின்பக்கம் அறையொன்று மறைமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்குள் பிரிட்ஜை வைத்து காதலியின் உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஷாட் வைத்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.