காதலியைக் காண பைக்கில் பறந்த காதலன்.. பெண் செய்த காரியம் - விபரீத முடிவு!

Death Dharmapuri Salem
By Vinothini Nov 18, 2023 10:10 AM GMT
Report

இளைஞர் ஒருவர் தனது காதலியை காண சென்றபோது நிகழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல்

தர்மபுரி மாவட்டம், மோளையானூர் பகுதியை சேர்ந்தவர் அகல்பிரியா 20 வயதான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருந்து கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரும் கட்டரசம்பட்டியை சேர்ந்த ஸ்டாலின் என்பவரும் காதலித்து வந்துள்ளார்.

bf-dead-in-accident-and-gf-attempted-suicide

அகல்பிரியா தீபாவளிக்கு தனது சொந்த ஊருக்கு வந்தார். தீபாவளி பண்டிகை முடிந்ததும் இவர் கோவைக்கு புறப்பட்டுள்ளார். அப்பொழுது இவர் தனது காதலனை சேலத்தில் வந்து பார்க்குமாறு கூறியுள்ளார். பின்னர், காதலியை பார்ப்பதற்காக பைக்கில் பறந்து வந்தார் ஸ்டாலின்.

எக்ஸ்பிரஸ் ரயில்.. ஸ்லீப்பர் சீட்டில் சில்மிஷம், எல்லைமீறிய காதல் ஜோடி - கடுப்பான பயணிகள்!

எக்ஸ்பிரஸ் ரயில்.. ஸ்லீப்பர் சீட்டில் சில்மிஷம், எல்லைமீறிய காதல் ஜோடி - கடுப்பான பயணிகள்!

சோகம்

இந்நிலையில், ஸ்டாலின் அயோத்தியா பட்டணம் பகுதியில் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த இவரது காதலி கதறி அழுதுள்ளார். பின்னர், இவரது பின்னர் வீட்டுக்கு சென்ற அகலப்பிரியா கடந்த 15-ம் தேதி தூக்க மாத்திரை மற்றும் விஷ கொட்டை உண்டு மயங்கி விழுந்தார்.

bf-dead-in-accident-and-gf-attempted-suicide

இதை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக அகல்பிரியாவை மீட்டு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.