ஆகஸ்டில் சுற்றிப்பார்க்க அசத்தலான இடங்கள்; அதுவும் தமிழ்நாட்டில் - அவசியம் விசிட் பண்ணுங்க!
தமிழ்நாட்டில் சுற்றிப்பார்க்க வேண்டிய முக்கியமான 5 சுற்றுலா தலங்களை பார்ப்போம்.
கொடைக்கானல்
மலைப்பூட்டும் மலைப் பயணம் கடந்து கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்வது, மலையை முத்தமிடும் மேகங்களை வருடுவது என வரவேற்க காத்திருக்கும். பியர் ஷோலா அருவி, பில்லர் பாறைகள், பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் போன்றவை கவரக் கூடிய இடங்களாக உள்ளன.
குன்னூர்
இயற்கை தந்த பரிசுதான் குன்னூர். அந்த அளவுக்கு திரில்லிங்கான மலைப் பாதைகள், தேகத்தை சிலிர்க்க வைக்கும் தேயிலை தோட்டங்கள் என கண்களை குளிர வைக்க அவ்வளவு இடங்கள் உள்ளது.
ஊட்டி
மலைகளின் அரசி எனப்படும் ஊட்டியும் பிரபலமான தலம். நீலகிரி மலை ரயில், தொட்டபெட்டா சிகரம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, டால்ஃபின் நோஸ், படகு சவாரி என ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்த பகுதி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
வால்பாறை
இயற்கை மாறாத அழகியலை தன்னகத்தே கொண்டது வால்பாறை. அடர்ந்த காடுகள், ஆனைமலை புலிகள் காப்பகம், நீரார் அணை, சோலையாறு அணை போன்றவை இங்கு சுற்றி பார்ப்பதற்கான இடங்கள்.
குற்றாலம்
மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் இருந்து கொட்டும் குற்றால அருவியில் குளிக்க மக்கள் படையெடுப்பார்கள். தென்னிந்தியாவின் ஸ்பா என அழைக்கப்படுகிறது. அதன் அழகை அனுபவிக்க ஆகஸ்டுதான் கடைசி வாய்ப்பு. தவறவிட்டால் அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.