காலையில் காஃபி குடிப்பது உடலுக்கு நல்லதா?ஆய்வு என்ன சொல்கிறது - அவசியம் படிங்க!
காலையில் காஃபி குடிப்பது குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
காஃபி
அமெரிக்காவின் துலானே பல்கலைக்கழகத்தில் காபி அருந்தும் பழக்கம் குறித்த ஆய்வு ஒன்று நீண்டகாலமாக நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 40,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் அவர்களின் ஆரோக்கியம், ஊட்டச்சத்துகள் மற்றும் வாழ்க்கைமுறை கண்காணிக்கப்பட்டுள்ளது. அதில் மக்கள் இரண்டு விதமாக காபி குடிப்பதைக் கண்டறிந்துள்ளனர். 36%க்கும் மேலான நபர்கள் காலையில் காபி அருந்துகின்றனர். 14% பேர் நாள் முழுவதும் காபி அருந்துகின்றனர்.
நல்லதா? கெட்டதா?
மற்றவர்கள் இடைப்பட்ட நேரத்தில் காபி அருந்துகின்றனர். பலவிதமான காரணிகளை ஆராய்ந்ததில் காபி அருந்தாதவர்களை விட காபி அருந்துகிறவர்கள் மரணமடைவதற்கான வாய்ப்புகள் 16% குறைவு. அதிலும் இதயநோயால் மரணமடைவதற்கான வாய்ப்புகள் 31% குறைவு எனக் கூறுகின்றனர்.
ஆனால் நாள் முழுவதும் காபி குடிப்பவர்களுக்கு காபியால் உடல் நலத்தில் எந்த பயனும் இல்லை. அவர்கள் மரணம் அடைவதற்கான வாய்ப்புகளில் மாற்றமில்லை. இந்த ஆய்வின் முடிவுகள் காபியை நாம் அருந்து விதத்தாலும் மாறுபடும்.
நாள் முழுவதும் காபி அருந்துபவர்கள் இனி காலை மட்டும் காபி அருந்தும் பழக்கத்துக்கு மாறலாம் என ஆய்வு முடிவுகள் பரிந்துரைக்கிறது.