திருவள்ளூர் மாவட்டத்தில் திகட்ட திகட்ட சாப்பிடனுமா? இதோ ஹோட்டல் லிஸ்ட்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேமஸ் ஆன ஹோட்டல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திருவள்ளூர் மாவட்டம்
சென்னைக்கு வடக்கே அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம் பழைய செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து பிரித்து 1997 ஆம் ஆண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் சென்னைக்கு அருகே அமைந்துள்ளதால் தொழில் மற்றும் பல்வேறு துறைகளில் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது.
இங்கு முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவில் உட்பட பல்வேறு பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்கள் இங்கு அமைந்துள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த உணவகங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
நம்ம புட்பார்க்
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது நம்ம புட்பார்க் உணவகம். காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் இந்த உணவகத்தில் சிக்கன் முதல் விதவிதமான அசைவ உணவுகள் கிடைக்கிறது.
3 பேர் முதல் 10 வரை சாப்பிட ரூ300 ல் தொடங்கி ரூ.2000 வரை பக்கெட் பிரியாணியும் கிடைக்கிறது. மேலும் பிறந்த நாள் கொண்டுவதற்காக தனியாக அறையும் உள்ளது. குடும்பத்துடன் சென்று உணவருந்த ஏற்ற உணவகம்.
குப்புசாமி செட்டிநாடு மெஸ்
ஆவடி தீயணைப்பு நிலையம் அருகே அமைந்துள்ளது குப்புசாமி செட்டிநாடு மெஸ். கூரை கடை என அழைக்கப்படும் இந்த கடையின் தோற்றமே கிராமத்தில் உள்ளது போல் அமைக்கப்ட்டுள்ளது. இந்த கடையில் சிக்கன், மட்டன், மீன், கடம்பா என அனைத்து வகையான அசைவ உணவுகளும் கிடைக்கிறது. இந்த கடையில் கறி தோசை ரொம்ப பேமஸ். விலை சற்றே அதிகம்.
விருந்து மல்டி குஷன் ரெஸ்டாரண்ட்
பூந்தமல்லி பை பாஸ் சாலையில் அமைந்துள்ளது விருந்து மல்டி குஷன் ரெஸ்டாரண்ட். காலை 7 மணி முதல் 10 மணி வரை இயங்கும் இந்த உணவகத்தில் விசாலமான பார்க்கிங் வசதியும் உள்ளது. ஹோட்டலின் பெயருக்கு ஏற்ப நல்ல விருந்து படைப்பார்கள்.
விலை கூட நார்மல்தான். சூப், ஐஸ் கிரீம் தொடங்கி பிரியாணி ப்ரைட் ரைஸ் வரை பெரும்பாலான உணவுகள் கிடைக்கிறது.
ஹோட்டல் சவுத் ஸ்பைசஸ்
மீஞ்சூர், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஹோட்டல் சவுத் ஸ்பைசஸ். காலை 11;30 வரை இரவு 11 மணி வரை இயங்கும் உணவகம். சிக்கன், மட்டன், இறால், காடை என பெரும்பாலான அசைவ உணவுகள் நார்மல் விலையிலே இங்கே கிடைக்கின்றன. மட்டன் கோலா உருண்டை, கேரளா சிக்கன் இங்க ஸ்பெஷல். குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட ஏற்ற உணவகம்.
வேலு மெஸ்
திருத்தணியில் அமைந்துள்ள சைவ உணவகம் வேலு மெஸ். காலை 7 மணி முதல் 10 மணி வரை இயங்கும் இந்த உணவகம். இங்கு உணவுகளின் விலை மிக குறைவு. அன் லிமிடெட் சாப்பாடு வெறும் ரூ.70 மட்டுமே. திருத்தணி பகுதிகளில் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற உணவகம் வேலு மெஸ்.
நித்யா அமிர்தம்
திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது நித்யா அமிர்தம் உணவகம். முழு சைவ உணவகமான இங்கு பெயரில் உள்ள அமிர்தம் போல் உணவுகள் உள்ளது. காலை 6 மணி முதலே இங்கு உணவுகள் கிடைக்கின்றன.
ரூ.65 முதல் ரூ.200 வரை வித விதமான தோசைகள் உள்ளது. குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட ஏற்ற உணவகம். விசாலமான பார்க்கிங் வசதியும் உள்ளது. இங்கு நுங்கு பால் மற்றும் விருதுநகர் பரோட்டா பேமஸ். விலை சற்றே அதிகம்.