கன்னியாகுமரியில் கம கமனு சாப்பிடணுமா? இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க
கன்னியாகுமரி
தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கே அமைந்த மாவட்டம் நாஞ்சில் நாடான கன்னியாகுமரி. இந்தியாவின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில், தமிழின் அடையாளமாக திருவள்ளுவர் சிலை, சமய அடையாளங்களாக விவேகானந்தர் பாறை, கோவில்கள், தேவாலயங்கள், புராதன அழகை ரசிக்க பத்மநாபபுரம் அரண்மனை, இயற்கை அழகை ரசிக்க திற்பரப்பு நீர்வீழ்ச்சி, கடற்கரைகள், பறவைகள் சரணாலயம் என சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாவட்டமாக அமைந்துள்ளது.
மேலும் இந்தியாவின் பிற கடற்கரைகளை விட, கன்னியாகுமரியின் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் சூரிய உதயத்தையும், சூரிய மறைவையும் பார்க்கவே தனி கூட்டம் உண்டு. செட்டிநாடு சமையல், கொங்கு நாடு சமையல் போல தனிச்சிறப்பை கொண்டுள்ள நாஞ்சில் நாடு சமையலை பற்றி பார்ப்போம்.
நேந்திரம் சிப்ஸ்
கன்னியாகுமரியின் ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் இங்க கிடைக்க கூடிய நேந்திரம் சிப்ஸ். நேத்திரம் வாழைப்பழத்துல இருந்து செய்யப்படுற இந்த சிப்ஸ் இங்க கல்யாண விருந்துல இடம்பெறும் அளவுக்கு இந்த மாவட்ட மக்களுக்கு முக்கியமானது.
நேந்திரங்காய் சிப்ஸ் குமரி மாவட்டத்தில் எல்லா கடைகளிலும் கிடைத்தாலும் கூட நாகர்கோவில் மணிமேடை அருகே 60 ஆண்டுகளாக இயங்கி வரும் ராமலெட்சுமி சுவீட் ஸ்டால் இந்த சிப்ஸ்க்கு புகழ் பெற்ற கடையாக விளங்குகிறது. கன்னியாகுமரிக்கு சுற்றுலா போன இதை வாங்க மறக்காதீங்க.
கடற்கரை நகரமான இங்கு மீனும் ரொம்ப பேமஸ்
சைவ உணவகம்
தாழக்குடி நீலகண்டன்
திருநெல்வேலி - நாகர்கோவில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஹோட்டல் தாழக்குடி நீலகண்டன்.
சைவ உணவகமான இங்கு 3 வகை சட்னியோட இட்லி, தோசை, பூரி என வழக்கமான காலை உணவுகள் எல்லாம் காலை 6:30 மணி முதலே கிடைக்கும். மதிய உணவுக்கு 120ரூ க்கு சாப்பாடு கிடைக்கும். டின்னர்க்கு ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ்னு எல்லா துரித உணவுகளும் உண்டு. இரவு 10:30 வரை திறந்து இருக்கும். வாகனங்களை நிறுத்த விசாலமான பார்க்கிங் வசதியும் உண்டு.
ஹோட்டல் சரவணா
பகவதி அம்மன் கோவில் மற்றும் கடற்கரைக்கு நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது தான் ஹோட்டல் சரவணா.
இங்கு காலை 6:30 மணி முதல் இரவு 10 மணி வரை உணவுகள் கிடைக்கும். சைவ உணவகமான இங்கு இட்லி, தோசையில் தொடங்கி வழக்கமான சைவ உணவுகள் எல்லாமே கிடைக்கும். ஆனால் விலை சற்றே அதிகம். டீ 25ரூ. ஏசி வசதியும் உண்டு.
அசைவ உணவகங்கள்
ஸ்ரீ அதிதி பவன்
மதுரை - கன்னியாகுமரி நெடுஞ்சாலைல ஹோட்டல் கொமோரின் கிராண்ட் அருகில் உள்ள உணவகம் ஸ்ரீ அதிதி பவன்.
இங்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை உணவுகள் கிடைக்கும். இங்கு பிரியாணி, ப்ரைடு ரைஸ், சிக்கன், மட்டன், இறால் என அசைவ உணவுகளும், தோசை,இட்லி, பன்னீர், கோபி மஞ்சூரியன் போன்ற சைவ உணவுகளும் கிடைக்கும். விலை சற்றே அதிகம். வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதியும் உண்டு.
The Curry
கன்னியாகுமரி கடற்கரைக்கு அருகே உள்ள உணவகம் தான் இது.
இங்க காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை உணவுகள் கிடைக்கும். இங்கு ரூ120 க்கு சாப்பாடு கிடைக்கும். ஜப்பானீஸ் சிக்கன், கிங் பிஷ் ப்ரை இங்க வர்ற வாடிக்கையாளர்களோட பேவரிட் உணவு.
தொப்பி வாப்பா பிரியாணி
நாகர்கோவில் வடசேரில் அமைந்திருக்கும் இந்த உணவகம். காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இங்கு உணவுகள் கிடைக்கும். பிரியாணி பிரியர்களுக்கான உணவகம் இது. இங்க 210ரூ முதல் பிரியாணி கிடைக்கும். சிக்கன், மட்டன், மீன், இறால் பிரியாணியும் உண்டு. மேலும் 3, 5 பேர் சாப்பிட கூடிய பக்கெட் பிரியாணியும் உண்டு. இங்க வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதியும் உண்டு.
உடுப்பி சர்வதேச உணவகம்
சேலம் - கன்னியாகுமாரி நெடுஞ்சாலையில் பத்மநாபபுரத்தில் அமைந்துள்ளது உடுப்பி சர்வதேச உணவகம். இங்கு காலை 7 மணி முதல் 10 மணி வரை உணவுகள் கிடைக்கும். இங்கு விலை சற்றே அதிகம். கார் பார்க்கிங் வசதியும் உண்டு.