திருப்பூர் போனால் இங்கெல்லாம் சாப்பிடாம வராதீங்க - தரமான ஸ்பாட் லிஸ்ட் இதோ..

Tiruppur
By Sumathi Nov 27, 2024 01:30 PM GMT
Report

திருப்பூர் உலகின் ஜவுளி நகரமாக கருதப்படுகிறது. அதே சமயம், திருப்பூருக்கு எப்போது சென்றாலும் தென்னிந்திய உணவு வகைகளின் சுவையை ரசிக்க முடியும். தொடர்ந்து தற்போது உயர்தர உணவு வகைகளுக்கு பிரபலமாகி வருகிறது.

அந்த வகையில் இங்கு தரமாக சாப்பிட சிறந்த இடங்கள் குறித்து பார்ப்போம்.

நளன் மூலிகை உணவகம்

 அவினாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இவ்வுணவகச் சமையல்களில், மிளகாய்க்குப் பதில் மிளகும், புளிக்குப் பதில் தக்காளியும்,பசுமோருக்குப் பதில் சோயாமோரும் பயன்படுத்தப்படுகின்றன. வாழைப்பூவடை, ராகிப்புட்டு, வெற்றிலை ரசம்,என வித்யாசமான ஆரோக்ய உணவுகளை இங்கு மட்டுமே சுவைக்க முடியும்.

நளன் மூலிகை உணவகம்

7 நாட்களும் 7 வகை மூலிகை உணவுகள் வழங்கப்படுகின்றன. சிற்றுண்டிகள் விற்பனையும் உள்ளது. அவ்வழியாக சென்றால் ட்ரை பண்ணி பாருங்க.

சக்தி மெஸ்

பிஎன் ரோடு, மில்லர் ஸ்டாப்பில் அமைந்துள்ளது. இங்கு மதிய வேளையில் சைவ மற்றும் அசைவ உணவுகள் கிடைக்கிறது. வெஜ் மீல்ஸ், பெப்பர் சிக்கன், சிந்தாமணி சிக்கன், குடல், மீன் உணவுகள் என அனைத்து வெரைட்டியும் கிடைக்கிறது. மேலும் மட்டன், சிக்கன் என பிரியாணியும் விற்பனை செய்யப்படுகிறது. விலையும் குறைவாக தரத்திற்கு ஏற்ப இருக்கும்.

ஃபுட் ஸ்டால்ஸ்

டிமார்ட் அருகில் உள்ள ஈஸ்ட் தெருவில் பல வகையான சிற்றுண்டி உணவகங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. குழந்தைகளுடன் இங்கு சென்றால் மாலை வேளையாக நன்றாக கழிக்கலாம். சைனீஸ், சாட் ஐட்டம்ஸ், ஸ்னாக்ஸ் போன்ற வகைகள் கிடைக்கிறது. 

Food Studio

food studio tiruppur

தாராபுரம் ரோடு, GH அருகில் அமைந்துள்ளது. சைவத்தில், பல வகையான உணவு வகைகளை சாப்பிட பெஸ்ட் ஆப்ஷன் இதுதான். விலையும் உணவிற்கு ஏற்றார் போலத்தான் உள்ளது. பஞ்சாபி மசாலா, மராத்தி மசாலா, காஷ்மீர் மசாலா, மலாய் கோஃப்தா, சிங்கப்பூர் மசாலா என சைவ உணவுகளை ஒரு புடி புடிக்கலாம். 

அன்னலட்சுமி மெஸ் 

பல்லடம் அருகே அமைந்துள்ளது. 35 வருடங்களுக்கு மேலாக இந்த உணவகம் இயங்கி வருகிறது. கல்யாண பந்தி போல் களைகட்டி வருகிறது. மதியவேளையில் அன்லிமிடெட் சாப்பாட்டுடன் கறி விருந்தே கிடைக்கிறது. 

அன்னலட்சுமி மெஸ்

kransky dine in

பழைய பேருந்து நிலையல் அருகே அமைந்துள்ளது. Continental உணவு வகைகள் திருப்பூரில் கிடைப்பது மிகவும் குறைவு. அதில் பெஸ்ட் சாய்ஸ் இந்த உணவகம் என்றே சொல்லலாம். சாண்ட்வெஜ் முதல் ஸ்டீக் வரை கிடைக்கிறது.

kransky dine in

தாய்மண்

குமார் நகர் 60 அடி ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு ஆரோக்கியமான அனைத்து வகையான சிறுதானிய உணவு வகைகளும் கிடைக்கிறது. எப்போதுமே இங்கு கூட்டம் நிறைந்த படியே காணப்படுகிறது. அந்த வழியாக சென்றால் மறக்காமல் ஒரு விசிட் அடிங்க. 

வாத்தியார் கடை

வாத்தியார் கடை

புஷ்பா தியேட்டர் அருகே அமைந்துள்ளது. 60 வருடங்களாக இயங்கி வருகிறது. டிபன் ஐட்டங்களுக்கு ரொம்ப ஃபேமஸ். ருசியான இட்லி, தோசை, பரோட்டா, பூரி போன்ற காலை மற்றும் இரவு உணவுகளுக்கு சிறந்த இடம். 

திருவாரூர் போனால் இங்கெல்லாம் வாய்க்கு ருசியா சாப்பிடலாம் - நோட் பண்ணுங்க!

திருவாரூர் போனால் இங்கெல்லாம் வாய்க்கு ருசியா சாப்பிடலாம் - நோட் பண்ணுங்க!