குளியலை போட்டுட்டு கமகமனு சாப்பிடனுமா? தென்காசியின் ஹாட் ஸ்பாட்ஸ்!
தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிறது. விவசாயம், உணவு, சுற்றுலா என எதற்கும் பஞ்சமில்லாத ஒரு மாவட்டம் என்றே சொல்லலாம்.
அப்படியே அங்கு அமைந்துள்ள அருவிகளில் குளியலை போட்டுவிட்டு.. பரோட்டாவை பிய்த்து போட்டு 3 வகை சால்னாக்களை ஊற்றி சாப்பிட்டால் போதும். அங்கு சென்றதன் பலன் கிடைத்துவிட்டது என்றது போலாகிவிடும்.
தென்காசியை பொருத்தவரை பரோட்டா, பிரியாணி மிகவும் பிரபலம். இவற்றை சாப்பிட ஏற்ற இடங்கள் குறித்துப் பார்க்கலாம்.
பிரானூர் பார்டர் புரோட்டா
செங்கோட்டை அருகில் உள்ள பிரானூர் பரோட்டா கடையில் சுற்றுலா பயணிகளும், மக்களும் பரோட்டாவை ருசிப்பது வழக்கம். பூப் போல சின்ன தட்டு போன்ற புரோட்டாவும், நாவில் எச்சில் ஊற வைக்கும் சால்னா ருசியும் வாடிக்கையாளர்களை இழுக்கும். நாட்டுக் கோழி சால்னா, சிக்கன், காடை, கவுதாரி,ரோஸ்ட், ஆம்லெட், ஆப்பாயில், சிங்கிள் ஆப்பாயில், முட்டோ புரோட்டா, சிக்கன் புரோட்டா போன்றவைகளும் இங்கு பிரபலம். குறைந்த விலையில் கிடைப்பதுதான் இதன் தனித்துவமே.
சங்கரன்கோவில் சுல்தான் பிரியாணி
இந்த கடை 100 வருஷத்துக்கு மேல் இயங்கி வருகிறது. இங்கு மட்டன் பிரியாணி மட்டும் தான் கிடைக்கும். காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையில் கிடைக்கும். மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா, மூளை என வாங்கு உண்ணலாம். சீரக சம்பா அரிசியில் தான் பிரியாணி செய்கின்றனர். ப்ளைன் மட்டன் பிரியாணி 150 ரூபாய்க்கும், ஒரு பிளேட் மட்டன் பிரியாணி 340க்கும் விற்கின்றனர். மாலை வேலையில் இங்கு கிடைக்கும் சூப்புக்கும் கூட்டம் அலைமோதும். இந்த கடையில் சூப்புடன் பன் கொடுக்கின்றனர். சூப்பில் அவற்றை முக்கி சாப்பிடுவதற்காகவே இந்த கடைக்கு நிறைய பேர் வருகின்றனர்.
கூரைக்கடை
தென்காசியிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் இடதுபுறமாக அமைந்திருக்கிறது கூரைக்கடை. அசைவப் பிரியர்களுக்கான தகுந்த இடம் இந்தக் கூரைக்கடை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, நண்டுக் குழம்பு, நாட்டுக்கோழி குழம்பு, ஈரல் கிரேவி, சுவரட்டி கிராவி, மீன் குழம்பு என இல்லாத ஐட்டமே கிடையாது. சைவப் பிரியர்களுக்காகச் சாம்பார், கூட்டு, ரசமும் இங்கு கிடைக்கிறது. கடையநல்லூர் அருகில் உள்ள சொக்கம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள இனிப்பகங்கள். அல்வாவின் பூர்விகம் என்றால் சொக்கம்பட்டிதான். அங்கு செல்ல நேர்ந்தால் கட்டாயம் அல்வா வாங்கி சாப்பிட்டுவிடுங்கள்.
ராஜ் மெஸ்
சுற்றிலும் பரோட்டா கடைகளுக்கு மத்தியில் ஓர் தரமான சைவ உணவகம். தென்காசியின் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. 50 வருடத்திற்கும் மேலாக இயங்கி வருகிறது. காலையில் வழக்கம்போல் இட்லி, தோசை, பொங்கல், வடை கிடைக்கிறது. மதிய வேளையில் சைவ சாப்பாடு ரூ75க்கு கிடைக்கிறது. குறிப்பாக இங்கு வத்தக்குழம்பும், கொத்தமல்ல சட்னியும் ஃபேமஸ். இரவில் 25 வகையான தோசை வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
ருசியா சாப்பிட இடங்கள் பார்த்தோம். அப்படியே இப்பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் ஸ்னாக்ஸ் ஐட்டங்களையும் பார்த்துவிடலாம்.
கடையநல்லூர் அருகில் உள்ள சொக்கம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள இனிப்பகங்கள். அல்வாவின் பூர்விகம் என்றால் சொக்கம்பட்டிதான். அங்கு செல்ல நேர்ந்தால் கட்டாயம் அல்வா வாங்கி சாப்பிட்டுவிடுங்கள்.
தென்காசியில் குற்றால மலைகளில் விளையும் மங்குஸ்தான் ரொம்ப ஃபேமஸ். வல்லம் பகுதியில் மங்குஸ்தான் பழம் அதிகம் விற்பனையாகி வருகிறது. குற்றால சீசன் பழங்களில் ஒன்றாகும்.
செங்கோட்டையில் மட்டுமே கிடைக்கும் காஜா பூரி. பேருந்து நிலையத்தில் சுட சுட பொறித்த ஜீராவில் போட்ட காஜா பூரி அதிக அளவுல விற்பனை ஆகும். அந்த பக்கம் போனீங்கன்னா மறக்காம சாப்பிட்டு பாருங்கள்.