திருப்பத்தூர் போறிங்களா? நாவில் எச்சில் ஊற வைக்கும்..இந்த உணவகங்களை மிஸ் பண்ணாதீங்க!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேமஸ் ஆன உணவு மற்றும் ஹோட்டல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திருப்பத்தூர் பல அழகிய சிறு சிறு சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது.ஜவ்வாது மற்றும் ஏலகிரி மலைகள், மிதமான வானிலை, அழகிய சுற்றுலாத் தலங்கள் என திருப்பத்தூர் நம்மை வரவேற்கிறது. இந்த ஊருக்குச் சென்றால் நீங்கள் கண்டிப்பா சாப்பிட மிஸ் செய்யக்கூடாத இடங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
அப்பா உணவகம்
திருப்பத்தூர் மாவட்டம் பெரிய கடை ,பள்ளி வாசல் செல்லும் வழியில் அப்பா உணவகம் அமைந்துள்ளது. காலை 11:00 மணிக்கு முதல் இரவு 01 :30 மணி வரை இயங்கும். இந்த உணவகம் அசைவ பிரியர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது.
இங்கு சிக்கன் , மட்டன், நண்டு , இறால் முதல் மீன் ,கருவாடு வரை அனைத்து அசைவ உணவு வகைகள் பரிமாறப்படுகிறது. இந்த உணவகத்தில் ஸ்பெசல் உணவு மூங்கில் பிரியாணி தான். விலை ஏற்றவாறு அதன் தரம் மற்றும் விலை உள்ளது. கூடுதலாக ஷவர்மா, சூப், ஐஸ் கிரீம் ஆகியவையும் கிடைக்கும்.
ஆம்புர் ஸ்டார் பிரியாணி
பிரியாணி என்பது சிலருக்கு வெறும் உணவு ஆனால் சிலருக்கு பிரியாணி என்பது ஓர் உணர்வு. இந்தியாவில் பல வகை பிரியாணிகள் உள்ளன. அதில் ஆம்பூர் பிரியாணி பிரபலமானது. ஆம்புரில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டார் பிரியாணி ஹோட்டல் அமைந்துள்ளது.
ஏசி வசதியுடன் குடும்பத்துடன் அனைவரும் வந்து செல்லக் கூடிய இடமாக உள்ளது. இந்த ஹோட்டலில் , மட்டன் சிக்கன், மீன் முட்டை பிரியாணி, பாஸ்மதி, சீரக சம்பா, பொன்னி, தம் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி என 20திற்கும் அதிகமான பிரியாணி வகைகள் எனப் பல வகை உண்டு.
ஆம்புர் ஸ்டார் பிரியானியில் விலை கூடுதலாக இருந்தாலும் சுவை ஈடுசெய்ய முடியாது. கூடுதலாக ஷவர்மா, சூப், ஐஸ் கிரீம் ஆகியவையும் கிடைக்கும்.
மண்பானை விருந்து
திருப்பத்தூரிலிருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த மண்பானை விருந்து ஹோட்டல். இந்த ஹோட்டல் மற்ற ஹோட்டல்கள் மாதிரி இல்லாமல் முலுவதும் கூறைவீடு போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஹோட்டலை சுற்றி இயற்கை சுழல் மிக்க செடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகத்திற்கு வரும் மக்கள் ரிலெக் செய்ய நல்ல இடமாக இருக்கும் . இயல்பாகவே மண்பாண்டத்தில் சமைக்கப்படும் உணவுக்குத் தனித்த ருசி உண்டு இந்த ஹோட்டலில் சிக்கன் , ஆட்டுகறி, இறால், நண்டு , முதல் முட்டை மீன் வரை மண்பாண்டத்தில் சமைக்கப்பட்டுச் சுட சுட பரிமாறப்படுகிறது. விலையும் நார்மல் ரேட்டில் கொடுக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு உணவகம்
திருப்பத்தூர் - ஆலாங்காயம் பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் 40 பேர் வசதியாக அமர்ந்து சாப்பிடலாம். காலை 11 மணிக்குத் திறந்து, 12 மணிக்கு மூடிவிடுவார்கள்.தொலைப்பேசியில் ஆர்டர் செய்தால் எடுத்துவைத்திருந்து, வரும் நேரத்தில் பரிமாறுகிறார்கள். பெரும்பாலும் சின்ன வெங்காயம்தான்.
பாக்கெட் மசாலாக்கள் இல்லை. சரக்குகளைச் சேர்த்து, தேவைக்கேற்ப ஆட்டுக்கல்லில் இடித்துப் பயன்படுத்துகிறார்கள். விறகடுப்பில்தான் சமைக்கிறார்கள். பிராய்லர் சிக்கன் பயன்படுத்துவதில்லை. அன்லிமிடெட் மீல்ஸ் 70 ரூபாய்.
சாதம், தண்ணிக்குழம்பு, மட்டன் எலும்புக் குழம்பு, ஆற்றுமீன் குழம்பு, ரசம். கூடவே, கடலைச் சட்னி, ஒரு பொரியலும் உண்டு. தேவையென்றால் தயிர் வாங்கிக்கொள்ளலாம்.