திருவண்ணாமலை போறிங்களா? சாப்பிட இந்த உணவகங்களை மிஸ் பண்ணாதீங்க
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேமஸ் ஆன ஹோட்டல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திருவண்ணாமலை
1989 ஆண்டு வடஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து திருவண்ணாமலை மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவண்ணாமலை இந்தியாவின் முக்கிய ஆன்மீக நகரமாகும். திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா மற்றும் வெளிநாடுகளிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வில் மட்டுமல்லாது ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் கூட பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்கு வருவார்கள். மேலும் இங்கு பல்வேறு புராதன கோவில்கள் உள்ளன. திருவண்ணாமலையில் சாப்பிட சிறந்த இடங்கள் குறித்து பார்க்கலாம்.
ஹோட்டல் கறிவிருந்து
திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது ஹோட்டல் கறிவிருந்து. ஹோட்டல் பெயரை போலவே சிறந்த அசைவ உணவகம். இங்க 15 வகையான சூப்புடன் பல விதமான பிரியாணி, பிரைடு ரைஸ், நூடுல்ஸ், தந்தூரினு அசைவ உணவகத்தில் எல்லாமே கிடைக்கும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிட ஏற்ற உணவகம்.
அருணை TN25 பிரியாணி
திருவண்ணாமலையில் உள்ள சைவ, அசைவ உணவகம் அருணை TN25 பிரியாணி . ஹோட்டல் பெயரை பார்த்தாலே தெரியும் இங்க பிரியாணி ரொம்ப ஸ்பெஷல். இங்க ரூ.50 க்கு பிளைன் தோசை தொடங்கி ரூ.240 க்கு நான்வெஜ் மிக்ஸ்டு தோசை வரை பல விதமான தோசை கிடைக்கும்.மேலும் ஷவர்மா, பிரியாணி, 20 வகை பரோட்டா ஜூஸ், தந்தூரி எல்லாம் கிடைக்கும். விலை தான் கொஞ்சம் அதிகம்.
ஆரோ உஷா ரெஸ்டாரண்ட்
திருவண்ணாமலை கிரிவல சாலையில் அமைந்துள்ளது ஆரோ உஷா ரெஸ்டாரண்ட். காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த உணவகம் இயங்கும். ஆன்மீக பயணமாக திருவண்ணாமலை போறவங்க கண்டிப்பா இங்க போகலாம்.
ஹோட்டல் முழுக்க ஆன்மீகம் சார்ந்த படங்கள் இருக்கும். இங்க தோசை இட்லி போன்ற உணவுகள் கிடைப்பதில்லை. சப்பாத்தி, ரைஸ், சாலட்ஸ், சௌப்ஸ், ஸ்நாக்ஸ் ஆகியவை கிடைக்கும். விலை கொஞ்சம் அதிகம். இங்க ஏசி அறைகள் மட்டுமில்லாம திறந்தவெளி தோட்டத்திலும், மொட்டை மாடி தோட்டத்திலும் அமைந்து சாப்பிடும் வசதியும் உள்ளது.
Dreaming Tree
திருவண்ணாமலையில் செங்கம் சாலையில் அமைந்துள்ளது Dreaming Tree. இந்த உணவகத்தில் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டே உணவு சாப்பிடுவது போல் வித்தியாசமான இருக்கைகள் இருக்கும். இங்கு வெளிநாட்டு உணவு வகைகளுடன் பாரம்பரிய உணவுகளையும் வழங்குகிறார்கள்.
குறிப்பாக பல்வேறு வகையான பாரம்பரிய அரிசி மற்றும் தானியங்களை கொண்டு உணவு தயாரிக்கிறார்கள். இங்கு பல்வேறு வகையான தோசை, பீட்ஸா, சாலட், சூப், ரைஸ் வழங்குகிறார்கள். விலை சற்றே அதிகம்.
வள்ளலார் மெஸ்
திருவண்ணாமலையில் 50 வருடத்திற்கு மேலாக இயங்கி வருவது வள்ளலார் மெஸ். சைவ உணவகமான இங்கு சாப்பிடும் போது வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டது போன்ற உணர்வு கிடைக்கும். தோசை, இட்லி, பூரி, ஊத்தப்பம் போன்ற உணவுகள் கிடைக்கும். இந்த ஹோட்டலில் உள்ள சட்னிக்கு மக்கள் வரிசையில் நிற்பார்கள். மொறுமொறுனு கிடைக்கும் வடை எத்தனை சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும் சாப்பிட தோணும்.
ஹோட்டல் கண்ணா
திருவண்ணாமலை பழைய முனிசிபல் அலுவலகம் அருகே உள்ளது ஹோட்டா கண்ணா. இங்கு காலை 6 மணி முதலே உணவுகள் கிடைக்கும். சைவ உணவகமான இங்கு வெரைட்டி ரைஸ், புலாவ் எல்லாம் கிடைக்கும் விலையும் நார்மல்தான்.
முக்கியமா இங்க 20 வகையான தோசை கிடைக்கும். அதோட 12 வகையான சட்னி, 2 பொடி தருவாங்க. இந்த சட்னிகளை டேஸ்ட் பார்க்க ஒரு தோசை பத்தாது. இங்க கிடைக்கிற சாம்பார் இட்லி ரொம்ப ஸ்பெசல்.