பெரம்பலூர் போறிங்களா? சாப்பிட இந்த உணவகங்களை மிஸ் பண்ணாதீங்க

Tamil nadu Perambalur
By Karthikraja Nov 29, 2024 10:15 PM GMT
Report

பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் மாவட்டம், 1995 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு பெரம்பலூர்ல இருந்து பிரித்து அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு போன எந்த ஹோட்டல்ல சாப்பிடலாம்னு பாக்கலாம்.

அப்பா மெஸ் 

appa mess perambalur

பெரம்பலூர்ல பட்ஜெட் விலையில நான் வெஜ் சாப்பிடணும்னா நீங்க போக வேண்டிய இடம் அப்பா மெஸ். ஏசி உணவகமான இங்கு இறால் தொக்கு, சிக்கன் தொக்கு, காடை தொக்கு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, நாட்டு கோழி சூப் இதெல்லாம் சேர்த்து ரூ.120 க்கு தரமான சாப்பாடு கொடுக்குறாங்க. இதை தாண்டி பல வகையான மீன் வறுவல், கிரேவி எல்லாம் கிடைக்கும். குடும்பதோடு அமர்ந்து சாப்பிட ஏற்ற ஹோட்டல். 

கூரைக்கடை ஜெயராமன் மெஸ்

சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது மறக்காம இந்த கூரைக்கடை ஜெயராமன் மெஸ்க்கு ஒரு விசிட் அடிச்சுட்டு வாங்க. ஏசி இல்லைனை கூட அவங்க கடையோட கூரை செட்டப்ல வர்ற சில்லுனு காற்றோட்ட சுட சுட நான்வெஜ் ஐட்டங்களை ஒரு பிடி பிடிக்கலாம். இங்க மட்டன் கோலா, மட்டன் சுக்கா, மட்டன் கிரேவி மட்டன் நல்லினு மட்டன் டிஷ் எல்லாமே வேற லெவல்ல இருக்கும். தரத்திற்கு ஏற்ற விலை இருக்கும். 

KOORAIKADAI JAYARAMAN MESS perambalur

Bawarchi

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ளது ஹோட்டல் Bawarchi. இங்க பரோட்ட ரொம்பவே பேமஸ். பன் பரோட்டா, நூல் பரோட்டா, சிக்கன் கொத்துனு நிறைய வெரைட்டிஸ் வச்சுருக்காங்க. அதுக்கு கொடுக்குற சிக்கன் அல்லது மட்டன் கிரேவி தனி டேஸ்ட். விலையும் நார்மல்தான். அது போக இட்லி தோசைன்னு டிபன் ஐட்டம்ஸும் பிரியாணி நூடுல்ஸ், தந்தூரி எல்லாமே இருக்கு. குடும்பத்தோட சாப்பிட ஏற்ற ஏசி உணவகம். 

புதுக்கோட்டையில் நாக்குக்கு ருசியா சாப்பிடணுமா? இந்த ஹோட்டல்களை மிஸ் பண்ணாதிங்க

புதுக்கோட்டையில் நாக்குக்கு ருசியா சாப்பிடணுமா? இந்த ஹோட்டல்களை மிஸ் பண்ணாதிங்க

அஸ்வின் வெஜ் ரெஸ்டாரண்ட்

சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அஸ்வின் வெஜ் ரெஸ்டாரண்ட். இங்கு எப்போதும் சென்றாலும் கூட்டம் அலைமோதும் அந்தஅளவிற்கு பெரம்பலூர் வட்டாரத்தில் பேமஸ் ஆன ஹோட்டல். காலை உணவுக்கு மொறு மொறுனு மெது வடை, பஞ்சு போல இட்லில சட்னியை அள்ளி ஊத்தி சாப்பிட வேற லெவல்ல இருக்கும். 

Aswins Veg Restaurant perambalur

மதியம் சாப்பாடுக்கு அவங்க கொடுக்குற பொடிக்கு தனி சுவை. மேலும் இங்க கொழுக்கட்டை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க. இங்க பார்க்கிங்க்கு விசாலமான இட வசதி உண்டு. இங்க ஷாப்பிங் செய்யவும் கடை உண்டு. அதுல டாய்ஸ், கைவினை பொருட்கள் தொடங்கி தொக்கு எல்லாம் கிடைக்கும்.

இஷ்டா

பெரம்பலூர்ல உள்ள இன்னொரு வெஜ் ஹோட்டல் இஷ்டா. இங்க பீட்ஸா, பாஸ்தா, பர்கர் தொடங்கி ரைஸ், நூடுல்ஸ், பிரியாணினு வெஜ்ல எல்லாமே கிடைக்கும். அது போக ஐஸ்கிரீம்ஸ், சூப்ஸ், மொஜிட்டோனு மெனு புக் ரொம்ப பெருசு. 

Ishtaa, Pure Vegetarian, perambalur

இந்த கடைல உள்ள ஸ்பெஷல் ஆபர் என்னனா ஒருத்தர் ரூ.500 செலுத்திட்டு அதுக்கான மெனு லிஸ்ட்ல என்ன வேணுமோ அன்லிமிடெட்டடா சாப்பிடலாம். குடும்பம் மற்றும் நண்பர்களோட சாப்பிடசிறந்த உணவகம். இங்க விசாலமான பார்க்கிங் வசதியும் உண்டு.