ராணிப்பேட்டை வழியா போறிங்களா? இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பேமஸ் ஆன உணவு மற்றும் ஹோட்டல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ராணிப்பேட்டை தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து இராணிப்பேட்டை பிரிக்கப்பட்டது. ராணிப்பேட்டை தென்னிந்தியாவின் ஒரு தொழில்துறை மையமாகும்.
தோல் மற்றும் தோல் பொருட்கள் காலணிகள், ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ராணிப்பேட்டைக்கு வரும் போது ருசியான உணவுகளை எங்கு கிடைக்கும் என பார்க்கலாம்.
கறி விருந்து
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் அலுவகம் எதிரே அமைந்துள்ளது இந்த கறிவிருந்து உயர்தர அசைவ உணவகம் .காலை 10:00 முதல் இரவு 12:30 மணி வரை இயங்கும். குழுவாக அமர்ந்து சாப்பிடும் வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், விசாலமான பார்க்கிங் வசதியுடன் அமைந்துள்ளது.
இந்த உணவகத்தில் சிக்கன், மட்டன், சிக்கன் சில்லி தொடங்கி கிரில், தந்தூரி,மட்டன் சுக்கா பிரியாணி என அனைத்து வகையான அசைவ உணவுகளும் கிடைக்கும். குறிப்பாக இந்த உணவகத்தில் 190 ரூபாய்க்கு அசைவ மீல்ஸ் வழங்கப்படுகிறது கூடுதலாக ஷவர்மா, சூப், ஐஸ் கிரீம் ஆகியவையும் கிடைக்கும்.
கிரேட் பிரியாணி
பொதுவாக பிரியாணி பேமஸ் பகுதிகள் என்றால் அது ஆம்பூர் பிரியாணி, ஆற்காடு பிரியாணி என நம்மில் பலருக்கு தெரியும் . ஆனால் ராணிப்பேட்டையில் பிரியாணிக்கு தனி இடம் உள்ளது என்றால் அது கிரேட் பிரியாணி உணவகம் தான். இந்த உணவகம் முத்துக்கடை பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது.
கிரேட் பிரியாணி உணவகம் மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும்.இதில் மட்டன் பிரியாணி 210 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அத்துடன் கத்தரிக்காய் ரைத்தா ,முட்டை ,மட்டன் கிரேவி வழங்கப்படுகிறது.
SMR Restaurant
வாலாஜாவில் மிகவும் பிரசித்தி பெற்றது தன்வந்திரி கோயில். இந்த செல்லும் வழியில் SMR Restaurant அமைந்துள்ளது. மக்களை கவரும் வகையில் பார்க் வசதி , வாட்டர் பால்ஸ் போன்றவை இந்த உணவகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும்.
குளிரூட்டப்பட்ட இந்த உணவகத்தில் விசாலமான பார்க்கிங் வசதி உள்ளது. குறிப்பாக SMR Restaurant ல் நார்மல் விலையிலே க்ரீன் தந்தூரி , பானை பரோட்ட பிரியாணி, நூடுல்ஸ் போன்ற உணவு வகைகள் கிடைக்கின்றன. குடும்பத்துடன் சென்று சாப்பிட ஏற்ற உணவகமாகும்.
TFC Restaurant
சென்னையில் பல இடங்களில் Midnight Biriyani உணவகங்கள் பேமஸ். சென்னையை அடுத்து ராணிப்பேட்டையில் Midnight Biriyaniக்கு பேர் போன இடம் TFC Restaurant தான்.இங்கு 99 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படுகிறது.
இங்கு பரிமாறப்படும் காரமான மற்றும் மசாலா நிறைந்த பிரியாணியாகும்.TFC உணவகம் அவர்களின் பலவகையான உணவு வகைகள் மற்றும் சுவையான உணவுகளுக்காக பிரபலமானது.
அமிர்தா Restaurant
பெங்களூரு தேசிய நெடுஞசாலையில் உள்ள சிப் கார்ட் பகுதியில் அமைந்துள்ளது டார்லிங் கிளாசிக் அமிர்தா ஹோட்டல்.அசைவ உணவகத்திற்கு பேர் போன ராணிப்பேட்டையில் வெஜிடேரியன் உணவகத்தில் சிறந்தது டார்லிங் கிளாசிக் அமிர்தா ஹோட்டல்.
இந்த உணவகத்தில் வெஜிடேரியன் மீல்ஸ் க்கு சாம்பார் , பாயாசம் , ரசம் , பொரியல் ,கேசரி உள்ளிட்ட 21 வகையான வழங்கப்படுகிறது. குழுவாக அமர்ந்து சாப்பிடும் வசதி, விசாலமான பார்க்கிங் வசதியுடன் அமைந்துள்ளது. ராணி பேட்டை வந்தால் டார்லிங் கிளாசிக் ஹோட்டல் ஒருமுறையாவது இங்கு சாப்பிட வேண்டும்