மார்பக புற்றுநோய் 1 stage..எப்படி இருக்கும் தெரியுமா..? இதை பாருங்க!
மார்பக புற்றுநோய் முதல் நிலை அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மார்பக புற்றுநோய்
உலகெங்கும் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில், 10.4% பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். ஒவ்வொரு 13 நிமிடங்களுக்கு ஒரு பெண் மார்பக புற்றுநோயால் இறக்கிறார் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 685,000 மக்கள் உயிரிழந்துள்ளனர் . இதுமட்டுமின்றி வயதான ஆண்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து அதிகம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அறிகுறிகள் அதிகம் காணப்படுகிறது.
இவை மார்பகங்களில் உள்ள செல்கள் புற்றுநோய் செல்களாக மாறி இந்த நோய் உருவாகிறது. இதை ஆரம்பத்திலே கவனிக்காமல் விட்டால் புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் பரவிவிடும். புற்றுநோய் கட்டிகள் வழக்கமான கட்டிகள் அல்லது வீக்கம் போலத் தோன்றும் . இதனால் உங்கள் மார்பகத்தின் அளவு, வடிவம் அல்லது விளிம்பில் மாற்றம் உண்டாகும்.
அறிகுறிகள்
இது மார்பக பகுதியை மட்டுமல்லாமல் கழுத்து, அக்குள், நெஞ்செலும்பு மற்றும் பிற பகுதிகளையும் பாதிக்கப்படும். மேலும் மார்பகத்தின் மற்ற பகுதிகளை விடச் சிவப்பு, ஊதா மாறுதல் . மார்பகத்திலிருந்து இரத்தக் கறை படிந்தல் அல்லது திரவ வெளியேறுதல்.
உடலில் வழக்கத்திற்கு மாறான வளர்ச்சிகள் அல்லது வீக்கத்தைக் கவனிக்கும் பொழுது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 15% பேர் மரபுவழி மரபணு மாற்றங்களைக் கொண்டிருப்பதால் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.