சென்னை மட்டுமா..செங்கல்பட்டும்தான் - சாப்பிட பெஸ்ட் சாய்ஸ்!
சென்னையின் அண்டை மாவட்டமாக இருப்பது தான் செங்கல்பட்டு. தெற்கு ரயில்வேயின் முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளது. பல்வேறு விதமான சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது. அதேபோல் இங்கு ருசியாக சாப்பிடவும் பல இடங்கள் உள்ளது.
அவ்வாறு அங்குள்ள சுற்றுலா தளங்களை காண செல்கையில், எங்கெங்கு சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.
நலம் விரும்பி உணவகம்
அண்ணா சாலையில் அமைந்துள்ளது. இது ஒரு சிறுதானிய உணவகம். ரூ.50க்குள் பல உணவு வகைகள் கிடைக்கிறது. முருங்கை அடை, சுண்டல், வடை. கம்பு, கேழ்வரகு, சிறுதாணிய தோசை வகைகள் என ஆரோக்கிய உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. கொள்ளு சூப், தேங்காய் பால், பருத்தி பால் என நாட்டுச் சர்க்கரையும் செய்யக்கூடிய பானங்களும் கிடைக்கிறது. அந்த வழியாக சென்றால் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.
Yellow Chilli Multi Cuisine Restaurant
ஜிஎஸ்டி சாலை, பெட்ரோல் பல்க் அருகே அமைந்துள்ளது. இங்கு சைனீஸ் மற்றும் முகாலய உணவு வகைகள் ஃபேமஸ். புல்கா முதல் கடாய் சிக்கன் வரை அத்தனை ஐட்டங்களும் கிடைக்கிறது. விலையும் உணவின் தரத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Ifthar restaurant
கோகுலபுரத்தில் அமைந்துள்ளது. பிரியாணிக்கு அவ்வளவு ஃபேமஸ். மட்டன் பிரியாணி, மந்தி பிரியாணி, முகல் மட்டன், சிக்கன் பிரியாணி என வகை வகையான பிரியாணி கிடைக்கிறது. சவர்மா போன்ற ஸ்னாக்ஸ் வெரைட்டிகளும் உள்ளது.
மனோஜ் பவன்
சைவ விரும்பிகளுக்கு இது ஒரு பெஸ்ட் சாய்ஸ். மாமந்தூரில் அமைந்துள்ளது. மதிய வேளையில் மீல்ஸ் உடன் அளிக்கப்படும் பருப்பு பொடி மற்றும் வெஜ் 65 மிகவும் பிரபலம். அதே போல் இரவு டிபன்களும் ஃபேமஸ். இந்த உனவகத்திற்கென தனி வாடிக்கையாளர்கள் பட்டாளம் உள்ளது.
அல் ஹபீபி
கிராண்ட் சதர்ன் டிரங்க் சாலை, ஊரப்பாக்கத்தில் அமைந்துள்ளது. இரவு 10 மணி வரை திறந்திருக்கும். இந்த உணவகம் ஃபிரைடு சிக்கன் உணவிற்கு பெயர்போனது. ஹாட் சிக்கன், பிட்சா, விங்க்ஸ், பர்கர், ஃபிரைஸ், ஃபிங்கர், ஸ்ட்ரிப்ஸ் போன்ற சுவையான ஸ்டார்ட்டர்ஸ் கிடைக்கிறது. அனைத்துமே நான் வெஜ் ஐட்டங்கள்தான்.
அரேபியன் கார்டன்
ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ளது. கடல் விருந்து வேண்டுமென்றால் கண்ணை மூடிவிட்டு இந்த உணவகத்தை சொல்லி விடலாம். அந்த அளவிற்கு இங்கு அனைத்து வகை கடல் உணவுகளும் பெஸ்ட். லாப்ஸ்டர், நண்டு, பிரான், பல வகையான மீன் உணவுகள் உள்ளது. மேலும் சிக்கன் உணவுகளும் கூட கிடைக்கும். கண்டிப்ப ட்ரை பண்ணலாம்.
Wafflehere
கோகுலபுரத்தில் அமைந்துள்ளது. Waffle, Burger, Momos கிடைக்கிறது. மாலை வேளையில் ஸ்னாக்ஸ் உடன் பொழுதை கழிக்கலாம் என எண்ணினால் இந்த ஷாப் ஒரு நல்ல சாய்ஸ். அதுவும் குழந்தைகள் விரும்பும் அனைத்து வகை ஐஸ்க்ரீம்களும், சாக்லெட்ஸ்களும் உள்ளது.