அரியலூர் போறிங்களா? சுவையான சாப்பாடு கிடைக்கும் இடங்கள் - நோட் பண்ணுங்க!
அரியலூரில் சுவையான சாப்பாடு எங்கெல்லாம் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அரியலூர் மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வதுடன் 'புவியியல் ஆராயச்சியாளர்களின் மெக்கா' எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. மரம், விலங்கு மற்றும் தாவர இனங்களின் பல்வேறு வகையான படிமங்கள் இம்மாவட்டத்தில் காணக்கிடைக்கின்றன.
இத்தகைய சிறப்பிமிக்க அறியலூருக்கு வந்தால் சுவையான சாப்பாடு எங்கெல்லாம் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம், அறியலாம்.
hang over தோசை கடை
அரியலூர் ஸ்டேடியம் எதிரே hang over தோசை கடை சாலையில் அமைந்துள்ளது. இந்த கடையில் 70 வகையான தோசைகள் பரிமாறப்படுகிறது. இந்த கடை தினசரி மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை செயல்படுகிறது.
இங்கு விலையும் தரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. சாலையோரம் கடை என்றாலும் மிகவும் சுத்தமாக பராமரிக்க்ப்படுகிறது.
கருணா செட்டிநாடு ஹோட்டல்
அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் RTO ஆபீஸ் அருகில் கருணா செட்டிநாடு ஹோட்டல் அமைந்துள்ளது. 'செட்டிநாடு' இந்த பெயரை கேட்டவுடனேயே நம்மில் பலருக்கு வாயில் எச்சில் ஊரும். நாட்டுகோழி குழம்பு, நெய் சோறு, கருவாடு
தொக்கு, மட்டன் சுக்கா, மீன் வறுவல், மீன் குழம்பு தொடங்கி முட்டை இங்கு பரிமாறப்படுகிறது. இந்த உணவகத்தில் குடும்பத்தாருடன் அமர்ந்து சாப்பிட கூடிய வகையில் உள்ளது. இந்த கடை காலை 10 மனிக்கு தொடங்கி இரவு 11 மணிவரை செயல்படும்.
360 Degree Bakery
அரியலூர் அரசு. கலைக் கல்லூரி அருகே 360 Degree Bakery அமைந்துள்ளது. இது ஒரு சிறந்த பொழுதுபொக்கு இடமாக உள்ளது. காலையிலும் சரி, மாலையிலும் சரி நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து சாப்பிட கூடிய வகையில் உள்ளது.
இந்த Bakeryயில் சுவையான கேக்குகள், பேஸ்ட்ரிகள்டேனிஷ், பேகல்ஸ், பிரவுனி பேக்கரியில் செய்யப்படுகிறது. இங்கு பஃப்ஸ், பன்கள், தேங்காய் பிஸ்கட்,பீட்சா,வேஜ் ரோல், மில்க் சேக், பிளாக் ஃபாரஸ்ட் கேக்,சாக்லேட் ஃபட்ஜுக் ,ஒயிட் ஃபாரஸ்ட் வித்யாசமான வகைகள் கிடைக்கிறது.
Disnep Food Court
அரியலூர் திருச்சி மெயின் ரோடு,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் உள்ளது இந்த Disnep Food Court.இந்த ஹோட்டலின் எண்டிரஸ் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இங்க வீட்டு சமையல் சாப்பிடுற சுவையோட வீட்டுல சாப்பிடுற மாதிரி ஒரு விருந்தோம்பல் கிடைக்கும்.
இட்லி தோசைல இருந்து பரோட்டா, பிரியாணி ,பிரை ரைஸ் வரை இங்கு கிடைக்கும். ஆனால் மதியம் 12;30 மணி முதல் மாலை 4 மணி வரை தான் இந்த உணவகம் இயங்கும்.