உலகின் டாப் பணக்காரர்; எலான் மஸ்க்கை ஓரம்கட்டிய பெர்னார்ட் அர்னால்ட் - யார் இவர்?
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் மஸ்க் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பணக்காரர்கள் பட்டியல்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல வணிக இதழ் பணக்காரர்கள் பட்டியல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் (LVMH) சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault)
முதலில் இருந்த எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார். எலான் மஸ்கின் கார் நிறுவனமான டெஸ்லாவின் பங்கு தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது.
பெர்னார்ட் முதலிடம்
அதோடு, பெர்னார்ட் அர்னால்டின் ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கிறது. ஆடம்பரப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், எல்விஎம்ஹெச் பங்குகள் 30 சதவீதம் அதிகரித்த பிறகு, 2023 ஆம் ஆண்டில் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு 39 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
தற்போது, அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு 207.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 204.5 பில்லியன் டாலராக உள்ளது
இந்தப் பட்டியலில், பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி 11-வது இடத்திலும், கவுதம் அதானி 16-வது இடத்திலும் இருக்கின்றனர்.