அந்தரத்தில் தொங்கும் பெண்ணை காப்பாற்ற முயலும் கணவர் - இறுதியில் நேர்ந்த சோகம்
மாடியில் தொங்கும் பெண்ணை கணவர் காப்பாற்ற முயலும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு
கர்நாடக மாநிலம் பெங்களூரு கனகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரூபா (வயது 27). இவர் தன் கணவருடன் 2 மாடி உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அப்போது மாடியில் நின்று தன் கணவருடன் பேசி கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் ரூபா எதிர்பாராத விதமாக சோப்பின் மீது கால் வைத்துள்ளார். இதில் கால் வழுக்கி மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழப் போனார். இதைக் கண்ட அவரது கணவர் ஓடிச் சென்று ரூபாவின் கைகளை இறுக பிடித்துக் கொண்டார். இருப்பினும், சில விநாடிகளில் ரூபா கை நழுவி மாடியில் இருந்து கீழே விழுகிறார்.
மருத்துவமனை
குடியிருப்பின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள் மீது விழுந்ததில் ரூபாக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூன்றாவது மாடியில் இருந்து ரூபாய் கீழே விழுவதையும் அவரது கணவர் தாங்கிப் பிடிப்பதையும் அருகில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.