தீவிரமாகும் குடிநீர் தட்டுப்பாடு; பெங்களூரைத் தொடர்ந்து இங்கேயுமா? திண்டாடும் மக்கள்!
பெங்களூருவில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடி வருகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு
மார்ச் முதல் வாரத்தில் இருந்தே பெங்களூருவில் தண்ணீர் பிரச்சினை பெரிய நெருக்கடியாக காணப்படுகிறது. இதனால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் வேலையில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூருவை ஒட்டி தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓசூரிலும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு காமராஜர் நகரில் 4 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன.
பரபரப்பு
அவற்றில் ஒன்றில் மட்டுமே தண்ணீர் வருகிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பஞ்சாயத்து பைப்புகளை சரிசெய்து உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்குமாறு ஏற்பாடு செய்து தாருங்கள் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்கவும். இல்லையெனில் ஓட்டு போட மாட்டோம் என்று கூறி அப்பகுதி மக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
தற்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு தலைதூக்க ஆரம்பித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.