ஐபிஎல் 2023: தப்பி பிழைக்குமா கொல்கத்தா? தக்க வைக்குமா பெங்களூரு - RCB Vs KKR
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் பெங்களூரு அணியும் கொல்கத்தா அணியும் இன்று இரவு மோத உள்ளது.
RCB Vs KKR
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் டூப்லெஸிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும், நித்திஸ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றது.
இதுவரை நடந்த 7 போட்டிகளில் விளையாடிய பெங்களூரு அணி மொத்தம் 4 போட்டிகளில் மட்டும் வெற்றிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியையும் 2 போட்டிகளில் வெற்றியை மட்டுமே பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் 8-ம் இடத்தில உள்ளது.
தப்பி பிழைக்குமா கொல்கத்தா?
இன்று 8வது போட்டியை எதிர்கொள்ளும் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய போட்டியில் டூப்லெஸிஸ் பேட்டிங்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு, மற்றும் முகமது சிராஜ் பௌலிங்கில் அதிரடி காட்ட வாய்ப்பு உள்ளது.
அதனால் பெங்களூரு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.