பிரிட்ஜில் துண்டாக கிடந்த பெண்ணின் உடல்..குற்றவாளி சடலமாக மீட்பு - என்ன நடந்தது?

India Bengaluru Murder
By Swetha Sep 26, 2024 10:09 AM GMT
Report

பெங்களூருவில் 30பாகங்களாக உடல் துண்டாக வெட்டி பெண் கொல்லப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

பெண் உடல்..

கடந்த சில தினகளூக்கு முன் கர்நாடக மாநிலம் பெங்களுவை அடுத்த வயாலிகாவல் பகுதியில் ஒரு வீட்டில் அதிக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்குப் புகார் அளித்தனர்.

பிரிட்ஜில் துண்டாக கிடந்த பெண்ணின் உடல்..குற்றவாளி சடலமாக மீட்பு - என்ன நடந்தது? | Bengaluru Girl Murder Accused Commits Suicide

அப்போது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த வீட்டைச் சோதனை நடத்தினர்.அப்போது பிரிஃஜில் பெண்ணின் உடல் 30க்கும் மேற்பட்ட துண்டுகளாகி வைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வ்சலைகலை ஏற்படுத்தியது .இது தொடர்பாகப் பெங்களூர் காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். முதற்கட்ட விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் - மகாலட்சுமி தம்பதி என்பது தெரியவந்தது .

இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவர்கள் கர்நாடக மாநிலம் நெலமங்களா பகுதியில் வசித்து வந்துள்ளனர் .கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகாலட்சுமி பிரிந்து

30 துண்டுகளாக ஃபிரிட்ஜில் கிடந்த இளம் பெண் உடல்..விசாரணையில் வெளியான திடுக் தகவல்!

30 துண்டுகளாக ஃபிரிட்ஜில் கிடந்த இளம் பெண் உடல்..விசாரணையில் வெளியான திடுக் தகவல்!

குற்றவாளி சடலம்

பெங்களூரு வயாலிகாவல் அருகே உள்ள விநாயகர் நகர் பைப் லைன் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார் . இந்நிலையில், பெங்களூரில் உள்ள ஒரு மாலில் வேலைக்குச் சென்றுவந்தார் மகாலட்சுமி. இவரைத் தினமும் ஒரு இளைஞர் வேலைக்கு அழைத்துச் சென்றுவந்துள்ளார்.

பிரிட்ஜில் துண்டாக கிடந்த பெண்ணின் உடல்..குற்றவாளி சடலமாக மீட்பு - என்ன நடந்தது? | Bengaluru Girl Murder Accused Commits Suicide

இந்த சுழலில் கடந்த 2-ம் தேதி முதல் மகாலட்சுமி திடீரென மாயமானார்.அவரது செல்போனுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலமுறை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் வரவில்லை எனவும் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மகாலட்சுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மகாலட்சுமியின் வீட்டிலிருந்து கடந்த 2 நாட்களாகக் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.

விரைந்து வந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.அப்போது சந்தேகத்தின் பேரில் பிரிஃஜை திறந்து பார்த்தபோது மகாலட்சுமி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் 30 துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது.

என்ன நடந்தது?

மேலும் மகாலட்சுமி கொலை 10 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில், அவருடன் வேலைப்பார்த்த மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

பிரிட்ஜில் துண்டாக கிடந்த பெண்ணின் உடல்..குற்றவாளி சடலமாக மீட்பு - என்ன நடந்தது? | Bengaluru Girl Murder Accused Commits Suicide

இந்த பெண் கொலையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த முக்தி ரஞ்சன் ரே மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மகாலட்சுமியின் கணவர் தெரிவித்தார். அந்த இளைஞரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தனிப்படை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை தீவிரமான விசாரணையில் இறங்கினர். அதன் ஒரு பகுதியாக கொலையில் முக்தி ரஞ்சன் ரே முக்கிய குற்றவாளியாக இருந்து வரும் நிலையில் ஒடிசாவில் உள்ள பத்ராக் மாவட்டத்தில் துசுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் முக்தி ரஞ்சன் ரே,

சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உயிரிழப்பு தொடர்பாக விசாரனை நடக்கிறது. அவரது மரணம் தற்கொலையாக அல்லது இருவவரின் கொலையில் வேறு ஒருவருக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.