அமேசான் ஆர்டரில் டெலிவரி செய்யப்பட்ட விஷ பாம்பு - வெளியான அதிர்ச்சி வீடியோ

Snake Bengaluru Amazon
By Karthikraja Jun 19, 2024 06:13 AM GMT
Report

அமேசானில் ஆர்டர் செய்ததற்கு பாம்பு ஒன்று டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூர்

பெங்களூரை சேர்ந்த தன்வி என்பவர் அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட பார்சலில் பாம்பு ஒன்று இருந்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். 

snake from amzon order bengaluru

இந்த எக்ஸ் பதிவில், அமேசானில் இருந்து எக்ஸ் பாக்ஸ் கண்ட்ரோலர் ஒன்றை ஆர்டர் செய்தோம் அமேசான் எங்களுக்கு இலவசமாக பாம்பு ஒன்றை அனுப்பியுள்ளது என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

டார்கெட் முடிக்காம டாய்லெட் போக கூடாது - ஊழியர்களிடம் சத்தியம் வாங்கிய அமேசான்

டார்கெட் முடிக்காம டாய்லெட் போக கூடாது - ஊழியர்களிடம் சத்தியம் வாங்கிய அமேசான்

அமேசான்

அந்த வீடியோவில் ஒரு பிளாஸ்டிக் வாளியில் அமேசான் பார்சல் உள்ளது. அந்த பார்சலில் இருந்து ஒரு பாம்பு வெளியே வர முயற்சிக்கிறது. ஆனால் பார்சலில் உள்ள பேக்கேஜிங் டேப்பில் சிக்கிய பாம்பு வெளிய வர முடியாமல் சிக்கியுள்ளது. 

இது குறித்து அமேசான் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் முறையிட்டனர். இதையடுத்து மன்னிப்பு கோரிய அமேசான் நிறுவனம், அவர்கள் செலுத்திய முழு தொகையையும் திரும்ப அளித்தது. பார்சலில் இருந்த பாம்பால் தங்களுக்கோ அல்லது டெலிவரி பிரதிநிதிக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் அச்சுறுத்தல் இருந்ததாக கூறியுள்ள அந்த தம்பதி, இது அமேசானின் அலட்சியத்தை காட்டுவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.