சென்னை சென்ட்ரல் - பெங்களூர் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் - முக்கிய அறிவிப்பு!

Chennai India Bengaluru Indian Railways Railways
By Jiyath Mar 30, 2024 09:50 AM GMT
Report

சென்னை சென்ட்ரல் - பெங்களூர்  டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ்

சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு வரை கடந்த 2013-ம் ஆண்டு டபுள் டக்கர் ரயில் சேவை துவங்கப்பட்டது. இந்த டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண். 22626) மொத்தம் 1200 பேர் அமரும் வசதி கொண்டது.

சென்னை சென்ட்ரல் - பெங்களூர் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் - முக்கிய அறிவிப்பு! | Bengaluru Chennai Double Tucker Train Time Change

அதில் 10 ஏசி சேர் கார் பெட்டிகள் உள்ளது. இந்த டபுள் டக்கர் ரயில் சென்னை - பெங்களூர் இடையே உள்ள சுமார் 360 கிலோமீட்டர் தூரத்தை 5.45 மணி நேரத்தில் கடக்கிறது. வழக்கமாக இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 7:25 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1:30 மணிக்கு பெங்களூரை சென்றடைகிறது.

1400 கி.மீ-ல் வெறும் 6 நிறுத்தங்கள்.. 450 கி.மீ பிறகுதான் முதல் நிறுத்தம் - மின்னல் ரயில்!

1400 கி.மீ-ல் வெறும் 6 நிறுத்தங்கள்.. 450 கி.மீ பிறகுதான் முதல் நிறுத்தம் - மின்னல் ரயில்!

நேரத்தில் மாற்றம்

பின்னர் பிற்பகல் 2:40 மணிக்கு புறப்பட்டு அதே இரவு 8:45 மணிக்கு சென்னை வந்தடைகிறது. இந்நிலையில் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் - பெங்களூர் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் - முக்கிய அறிவிப்பு! | Bengaluru Chennai Double Tucker Train Time Change

அதன்படி, "வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் பெங்களூருவில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். ஏற்கனவே புறப்பட்ட நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் முன்பாக புறப்படவுள்ளது" என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.