குடிநீரை வீணாக்கிய 112 பேருக்கு ரூ.5.60 லட்சம் அபராதம் - பெங்களூரை விரட்டும் கொடுமை!
குடிநீரை வீணாக்கிய 112 பேருக்கு ரூ.5.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் பிரச்சணை
பெங்களூரில் வெப்பம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. கோடை தொடங்கும் முன்பே இந்த நிலை நீடிக்கிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் பிரச்சினையை சமாளிக்க குடிநீர் வாரியம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களை கழுவுதல், நீச்சல் குளங்களில் தண்ணீர் நிரப்புதல், தோட்ட பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிக்கு குடிநீரை பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
அபராதம்
இதனை தொடர்ந்து செய்துக்கொண்டே இருந்தால் கூடுதலாக ரூ.500 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், குடிநீரை வீணாக்கிய 112 பேருக்கு ரூ.5.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குடிநீரை வீணாக்குவோர் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டும் பெங்களூருவில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குடிநீரை வீணடிக்கும் செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.