நீதிமன்ற வாசலில் மாமியார் - மருமகள் சண்டை.. பதறி ஓடிய வழக்கறிஞர்கள் - வைரல் வீடியோ!
நீதிமன்ற வாசலில் மாமியார் - மருமகள் சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்துள்ளது. பின்னர் விசாரணை முடிந்து நீதிமன்றத்திற்கு வெளியே மாமியார் மருமகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நின்றுள்ளனர்.அப்போது மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தலைமுடியைப் பிடித்து இழுப்பதும் உடைகளைக் கிழித்துக் கொள்கின்றனர். சிறிது நேரத்தில் ,மொத்த குடும்பமும் சண்டையில் ஈடுபட்டது நிலைமை மோசமாக்கியது.சம்பவ இடத்திலிருந்த சில பெண் காவலரும்,வழக்கறிஞர்களும் ஆரம்பத்திலிருந்து வேடிக்கை மட்டுமே பார்த்து நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சண்டையிட்ட சம்பவம்
தொடர்ந்து நிலைமை மோசமடைவதை கவனித்த சிலர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் மாமியார் யமுனா யஷ்வந்த் நிகம் மற்றும் மருமகளின் சகோதரர் தீபக் ஹிராமன் சால்வே , துல்கான், மஹிரவாணி ஆகிவரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. நீதிமன்ற நுழைவாயிலில் நடந்த வன்முறைச் சம்பவம், முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.