பொம்மையோடு குடும்பம் நடத்தும் இளைஞர் - காரணத்தை பாருங்களேன்..
இளைஞர் ஒருவர் பொம்மையோடு குடும்பம் நடத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பொம்மை காதலி
மேற்கு வங்காளம், சாகர்பாரா என்ற ஊரைச் சேர்ந்தவர் வித்யுத் மண்டல். இவர் பொம்மையை கடந்த 6 மாதங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வருவதாக கூறுகிறார்.
இதில் காதலர் தன் காதலியை நாள் முழுவதும் தனது இடுப்போடு சேர்த்து கட்டியபடியே அன்றாட வேலைகளில் ஈடுபடுகிறார். மேலும், தனது பொம்மை காதலியோடு வித்யுத் பைக்கில் சென்ற வீடியோ இணையத்தில் பெரும் வைரலானது.
வைரல் சம்பவம்
இதுகுறித்து அவர் பேசுகையில், எங்கள் உறவுமுறை குறித்து மற்றவர்கள் குறை கூறுவதையோ, கிண்டல் செய்வதையோ, கேள்வி கேட்பதையோ நான் கண்டுகொள்வதேயில்லை.
என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்கு கவலையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கொலம்பியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் என்பவர் பொம்மையை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.