Glass Skin போல் சருமம் வேண்டுமா?அப்போ இதனை ஃபாலோ பண்ணா போதும்-நோட் பண்ணுங்க!
ஊற வைத்த உலர் திராட்சை தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உலர் திராட்சை
அழகான சருமத்தைப் பெற உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நமது சருமம் நம் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிறது. இதற்காக விலையுயர்ந்த அழகு சாதன பொருள்களை வாங்கி பயன்படுத்தி பார்ப்பார்கள்.
ஆனால் இந்த பொருட்களால் தற்காலிக பலன்களை மட்டுமே கொடுக்க முடியும்.ஆனால் உங்களுக்கு நிரந்தர பலன்கள் வேண்டும் என்றால் இயற்கையான பொருள்களைக் கொண்டு பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.
இதற்குச் சிறந்த உதாரணம் உலர் திராட்சை. இது குறித்து விரிவாக பார்க்கலாம். உலர் திராட்சையில் கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
நன்மைகள்
இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
இரவில் உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து அதை அடுத்த நாள் காலையில் குடிக்க வேண்டும். இவை உடலில் நச்சுகளை வெளியேற்றவும், நீரேற்றத்தை மேம்படுத்துகிறது.
இது மென்மையான, கதிரியக்க சருமத்தை பராமரிப்பதில் முக்கிய காரணியாகும்.உலர் திராட்சை ஊற வைத்த தண்ணீரை கொலாஜன் உற்பத்தியை விரைவு படுத்தி உங்கள் சருமத்திற்கு இயற்கை பொழிவு தரும்.
இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம்.