மாரடைப்பு - சுகர் வரை; தொப்பை இருந்தால் இந்த பாதிப்பெல்லாம் வருதா?

Heart Attack Diabetes
By Sumathi May 22, 2024 10:19 AM GMT
Report

தொப்பை இருந்தால், இந்த 5 பாதிப்புகள் நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

தொப்பை  

நம் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் கேடு செய்வதோடு அழகியல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் காரணமாக தொப்பை உள்ளது.

மாரடைப்பு - சுகர் வரை; தொப்பை இருந்தால் இந்த பாதிப்பெல்லாம் வருதா? | Bellyfat Reason For Sugar Heart Attack Details

அதிகப்படியான கொழுப்புகள் அழற்சி ரசாயனங்களை வெளியேற்றுவதன் காரணமாக டைப்-2 டயாபடீஸ், இதய நோய்கள், குறிப்பிட்ட சில வகையான புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்படுகிறது.

இதய தமனியில் அடைப்புகள் உருவாகவும் காரணமாக அமைவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இதனால், ஹைபர்டென்சன், மாரடைப்பு, பெருந்தமனித்தடிப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வரும் ஆபத்து அதிகமாகிறது.

#Simple Solution - இப்படி தண்ணீர் குடிச்சா தொப்பை குறையுமாம்?

#Simple Solution - இப்படி தண்ணீர் குடிச்சா தொப்பை குறையுமாம்?

பாதிப்புகள்

மேலும், உள்ளுறுப்பு கொழுப்புகள் இன்சுலின் எதிர்ப்பிற்கும் ரத்தத்தில் கொழுப்புகள் அதிகமாவதற்கும் காரணமாக அமைகிறது. இதனை கவனிக்காவிடில், ரத்த சர்க்கரை அளவு அதிகமாகி டைப்-2 டயாபடீஸ் வரக்கூடும். ஹார்மோன் சமநிலையும் பாதிப்படையும்.

heart attack

இரவு தூங்கும் போது, மார்பு மற்றும் அடிவயிற்றை சுற்றியுள்ள கொழுப்புகள் நுரையீரல் சுருங்கி விரிவதை தடுத்து சுவாசிப்பதை சிக்கலாக்குகிறது.

diabetes

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் நோய்த்தொற்று ஏற்படும். ஆட்டோ இம்யூன் நோய்கள், கீல்வாதம், நரம்புக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வர அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுனர்களால் எச்சரிக்கப்படுகிறது.