பகலில் பிச்சைக்காரன்.. இரவில் இப்படியா? கொந்தளிக்க வைத்த வீடியோ!
பகலில் பிச்சைக்காரராக இருக்கும் ஒருவரின் வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக்கில் பிச்சைக்காரர்
மத்தியப் பிரதேசம், போபாலில் பிச்சை எடுக்கும் ஒரு நபர், மதுக்கடையில் நின்று கொண்டிருந்துள்ளார். அங்கு அவர் பிச்சை எடுக்கிறார் என்று பார்த்தால், தனது கையில் இருக்கும் பணத்தை கொடுத்து மது வாங்குகிறார்.

இதில் அவருக்கு பலமுறை தானம் செய்த நபர், இந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அதனை வீடியோவாக எடுத்துள்ளார். அதில், பிச்சைக்காரர் ஒரு மதுபாட்டிலை வாங்கி தனது பைக்குள் வைத்துக் கொண்டு செல்கிறார்.
அதிர்ச்சி வீடியோ
இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் தான் உண்மையில் கஷ்டப்படும் நபர்களுக்கு யாருமே உதவுவதில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்தூரில் பிச்சை எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
இந்திய தலைநகரை உலுக்கிய கார் வெடிப்பு..! நேரில் கண்டவரின் வாக்குமூலம்: அதிர்ச்சியில் மோடி அரசு IBC Tamil