சரமாரியாக எகிறும் பீர் விலை - மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!
பீர் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பீர் விலை
கர்நாடகாவில், மதுபானங்களின் மீதான கலால் வரி பட்ஜெட்டில் உயர்த்தப்படுவது வழக்கம். இதன் மூலம் மதுபானங்கள், பீர் வகைகளின் விலை உயரும்.
ஆனால் இந்த முறை பட்ஜெல் தாக்கலுக்கு முன்பாகவே, அரசு, கலால் வரியை உயர்த்தி பீர் விலையை அதிகரித்து அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வருகிற 20-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரூ.10 முதல் ரூ.40 வரை பீர் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
உயர்வு
அதிலும், சில குறிப்பிட்ட பீர்களின் விலை மட்டுமே உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. லெஜண்ட் ரூ.145 (பழைய விலை-ரூ.100), பவர் கூல் ரூ.155 (ரூ.130), பிளாக் போர்ட் ரூ.160 (ரூ.145), ஹண்டர் ரூ.190 (ரூ.180),
உட்பகர் கிரஸ்ட் ரூ.250 (ரூ.240), உட்பகர் கிளைட் ரூ.240 (ரூ.230) ஆக உயர்த்தப்படவுள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.