பீர் ஊற்றினால் 150 கி.மீ வேகத்தில் செல்லும் பைக் - புதிய கண்டுபிடிப்பு!
அமெரிக்காவில் பீரால் இயங்கும் புதிய வகை மோட்டார் சைக்கிளை இளைஞர் ஒருஒரு கண்டுபிடித்துள்ளார்.
பீர் பைக்
அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா மாகாணத்தில், மைக்கேல்சன் என்னும் இளைஞர் பீரால் இயங்கும் புதிய வகை பைக்கை கண்டுபிடித்துள்ளார்.
இதில் இவர், பொதுவாக பைக்கில் இயங்கும் எரிவாயு இயந்திரத்திற்கு பதிலாக 14 காலன் எடை கொண்ட வெப்பம் இயந்திரத்தை இணைத்துள்ளார்.
இதில் பீரை ஊற்றும்போது 300 டிகிரி வரை சூடேறுகிறது.
150 கி.மீ வேகம்
தொடர்ந்து, இந்த பைக் முன்னேறி செல்வதற்கு ஏதுவாக அதிக வெப்பம் நீராவியாக மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பைக் 150 கி.மீ வேகம் வரை செல்லும் என்று இதனை கண்டுபிடித்தவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து, எரிவாயு விலை அதிகரிப்பதனால் அதற்க்கு மாற்றாக இதனை கண்டுபிடித்ததாக கூறியுள்ளார்.