அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - இந்திய நீதிபதியின் மகள் உட்பட 8 பேர் பலி!
அமெரிக்காவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய பெண் உட்பட 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ்
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து, தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் என்ற நகர் உள்ளது.

அதன் அருகே அலேன் ப்ரீமியம் மால் என்ற மாபெரும் ஷாப்பிங் மால் உள்ளது. இந்த மாலுக்குள் மாலை 3.30 மணி அளவில் 33 வயதான வாலிபர் திடீரென துப்பாக்கியுடன் புகுந்து அங்கிருந்த மக்களை நோக்கி சரிமாரியாக சுடத் தொடங்கியுள்ளார்.
இதனால் அந்த இடம் கலவரமானது, விஷயம் அறிந்து செக்யூரிட்டி விரைந்து வந்து அந்த வாலிபரை சுட்டு வீழ்த்தினார்.
பரிதாப பலி
இந்நிலையில், சம்பவ இடத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் மற்றும் 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த 8 பேரில் 27 வயதான இந்திய இளம்பெண்ணான ஐஸ்வர்யா தட்டிகொண்டா என்பவரும் உள்ளார். இவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர், இவரது தந்தை நர்சி ரெட்டி ரெங்காரெட்டி மாவட்டத்தில் மாவட்ட நீதிபதியாக உள்ளார்.
இவர் தனது முதுகலை பட்டத்தை அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முடித்துவிட்டு, அங்கே தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் தனது நண்பர்களுடன் மாலிற்கு ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது தான் இவர் கோர சம்பவத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவரின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan