Thursday, Jul 10, 2025

சென்னை உணவுத் திருவிழா - லிஸ்ட்டில் சேர்க்கப்பட்ட பீப் பிரியாணி!

Tamil nadu Chennai
By Sumathi 3 years ago
Report

சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவு திருவிழா

உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்றும் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு திருவிழா நடத்தப்படுகிறது.

சென்னை உணவுத் திருவிழா - லிஸ்ட்டில் சேர்க்கப்பட்ட பீப் பிரியாணி! | Beep Biryani From Today At Chennai Food Festival

'சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவில் திரை கலைஞர்கள், முக்கிய கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

பீஃப் பிரியாணி

இவ்விழாவினை அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் இருவரும் நேற்று தொடங்கி வைத்தனர். இந்த சூழலில் சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் உணவு திருவிழாவில் பீஃப் பிரியாணி இடம்பெறவில்லை.

சென்னை உணவுத் திருவிழா - லிஸ்ட்டில் சேர்க்கப்பட்ட பீப் பிரியாணி! | Beep Biryani From Today At Chennai Food Festival

இது சர்ச்சையான நிலையில் பீஃப்பிரியாணி அரங்குகள் அமைக்க விற்பனையாளர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்காததால் பீஃப் பிரியாணி இடம்பெறவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று விளக்கம் அளித்தார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் 

இந்நிலையில் சென்னை தீவு திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் மூன்று பீப் கடைகளுக்கு சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும் இன்று மாலை பீப் பிரியாணி விற்பனையை நேரில் சென்று பார்வையிட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி தராதது விமர்சிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது