நானும் பீஃப் சாப்பிடுறவன்தான் : பிரியாணி சர்ச்சை விளக்கம் கொடுத்த அமைச்சர்
சென்னை உணவு திருவிழாவில், பீப் அரங்கு அமைக்க யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
உணவுத் திருவிழா
சென்னை தீவு திடலில், தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு திருவிழா இன்று தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவானது, 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த உணவு திருவிழாவை அமைச்சர் நா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நானும் பீப் சாப்பிடுவேன்
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம், சிக்கன் மட்டன் பிரியாணிக்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது ஆனால், பீஃப் பிரியாணிக்கு அரங்கு இல்லையே ? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், நானும் பீஃப் சாப்பிடுபவன் தான். ஆனால் இங்கு அரங்கு அமைப்பதற்கு யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதால் பீப் அரங்கு அமைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க மக்கள் அளித்த ஆணை : அரசுக்கு நினைவுபடுத்தும் எதிரணி எம்.பி IBC Tamil