யாரு சாமி நீ..? பீடா கடைக்காரர் தான் - ஆனா உடம்பில் 2 கோடிக்கு நகை!!
தங்கம் என்பது உலகம் முழுவதும் பிடித்த பொருளாகவே உள்ளது. குறிப்பாக இந்திய கலாச்சாரத்துடன் தங்கம் மற்றும் தங்கத்தால் செய்யப்படும் நகைகளுக்கு பெரிய மதிப்பும் கவுரவமும் அளிக்கப்படுகிறது.
அதன் காரணமாக, தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது. பெண்கள் பெரும்பாலும் நகைகளை விரும்பி அணிவார்கள் என்பதை தாண்டி, தற்போது ஆண்களும் நகை அணிந்து வெளியில் செல்கிறார்கள். இது மனிதர்களின் கவுரவத்துடன் தொடர்பாகிறது. நகை அணிவது மதிப்பு என்றாலும், சிலர் அளவுக்கு மீறி நகைகளை அணிந்து பெரும் வைரலாகிறார்கள்.
அப்படி தான் ஒருவரை பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பிகானர் என்ற பகுதியில் கடந்த 93 ஆண்டுகளுக்கும் மேலாக பீடா கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. பாரம்பரிய வியாபாரமான இதனை தனது தாத்தா, தந்தை ஆகியோரை அடுத்து தற்போது பூல்சந்த் என்பவர் நடத்தி வருகிறார்.
இவரின் தோற்றமே பலரையும் அசத்தி விடுகிறது. காரணம் இவர், தன்னுடைய உடல் முழுவதும் ஏராளமான தங்க நகைகளை அணிந்து கொண்டு காணப்படுகிறார். இவர் அணிந்திருக்கும் நகைகளின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
காதணியை துவங்கி கையில் பிரேஸ்லெட்டுகள் கழுத்தில் தங்க செயின் என உடல் முழுக்க தங்க நகை அணிந்து வியாபாரம் செய்து வருகிறார் இவர். சமீபத்தில் இவரது கடை குறித்த வீடியோ இணையத்தில் வெளியாக இவர் பெரும் பிரபலமடைந்துள்ளார்.