இனி Non AC ஸ்லீப்பர் பயணிகளுக்கும் தலையணை - கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Indian Railways
By Sumathi Nov 28, 2025 04:44 PM GMT
Report

தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 ஸ்லீப்பர் கோச்

தினந்தோறும் பல கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். அதில் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பெட் ஷீட் மற்றும் தலையணை வழங்கப்பட்டு வரும் நிலையில்,

sleeper coach

வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் தூங்கும் வசதி கொண்ட ஸ்லீப்பர் வசதி கொண்ட பெட்டியில் முன்பதிவு செய்து பயணிக்கும் பெட் ஷீட் மற்றும் தலையணை வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தூங்கும் வகை (Sleeper Class) பயணிகளுக்கான வசதி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், புதிய முன்னோடியான சேவையை அறிவித்துள்ளது. இந்திய ரயில்வேவில் முதல் முறையாக நன்கு சுத்தம் செய்யப்பட்ட படுக்கைப் பொருட்களான பெட்ஷீட் மற்றும் தலையணை வழங்கப்படவுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண் - மிரண்ட பயணிகள்

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண் - மிரண்ட பயணிகள்

ரயில்வே அறிவிப்பு

இந்த சேவையானது ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும். AC வசதி இல்லாத ஸ்லீப்பர் பயணிகள், தங்களது பயணத்தின் போது தேவைப்பட்டால் கட்டண அடிப்படையில் சுத்தமான படுக்கைப் பொருட்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

indian railways

முதல் கட்டமாக, சென்னையில் இருந்து புறப்படும் 10 ரயில்களில், 3 ஆண்டுகளுக்கு இச்சேவை அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வருடத்திற்கு ₹28,27,653 வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

படுக்கைத் துணி + தலையணை + தலையணை உறை பெறுவதற்கு 50 ரூபாய் கட்டணம் தலையணை + தலையணை உறை 30 ரூபாய் கட்டணம் பெட் ஷீட் பெறுவதற்கு 20 ரூபாய் கட்டணம்