இந்த சாதி மட்டும்தான் கலந்துக்கனும்..ஜெயிச்சா என்ஆர்ஐ மாப்பிள்ளை - வெடித்த சர்ச்சை
அழகுப் போட்டியில் பொதுவான சாதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அழகுப்போட்டி
பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் பெண்கள் அழகுப்போட்டி வரும் 23ம் தேதி ஸ்வீட் மிலன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. அதற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் சர்ச்சை கிளம்பியது. அதில், பொதுவான சாதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்றும்,

இந்த அழகுப் போட்டியில் வெற்றி பெறும் பெண்ணுக்கு கனடாவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்திய இளைஞனை திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
சர்ச்சை விளம்பரம்
மேலும், இது பெண்களை அவமதித்து அநாகரீகமான முறையில் அதை விளம்பரமும் செய்திருப்பதாக பெண்கள் அமைப்புகளும் கொந்தளிக்கின்றன. அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சுரிந்தர் சிங் மற்றும் ராம் தயாள் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து, இதுபோன்ற ஒரு அழகு நிகழ்ச்சி நடைபெறுவது தொடர்பாக தங்களிடம் யாரும் முன்பதிவு செய்யவில்லை என்று ஹோட்டல் ஸ்வீட் மிலன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தேவையில்லாமல் தனது பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.