சருமத்தில் வெல்லம் பயன்படுத்தலாம் தெரியுமா? முகம் பொலிவாக இருக்க இதை செய்யுங்கள்!

World Beauty
By Swetha Jul 17, 2024 11:06 AM GMT
Report

வெல்லம் பயன்படுத்தி முகம் பொலிவாக வைத்திருக்கும் டிப்ஸை தெரிந்துகொள்ளலாம்.

முகம் பொலிவு

ஒவ்வொரு பெண்களும் தங்களது முகத்தை பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என விரும்புவதுண்டு. இதற்காக அதிக செலவுகள் செய்வார்கள். ஆனால், எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தினால் போதும் எந்த பக்க விளைவுகளும் இருக்காது.

சருமத்தில் வெல்லம் பயன்படுத்தலாம் தெரியுமா? முகம் பொலிவாக இருக்க இதை செய்யுங்கள்! | Beauty Benefits Of Applying Jaggery On Face

அந்த வகையில், உங்கள் முகம் பார்ப்பதற்கு அழகாகவும், பளபளப்பாக்கவும் வைத்திருக்க வெல்லம் பயன்படுத்தலாம். இதுவரை சமையலுக்கு பயன்படுத்திய வெல்லம் தற்போது சருமன் தொடர்பான பிரச்சினைகளை நீக்குவதிலும் வல்லமை கொண்டுள்ளது.

சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்கள் - சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம்!

சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்கள் - சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம்!

வெல்லம்

வெல்லத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது வயதான செயல்முறையை மெதுவாக்குகிறது, முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்குகிறது.

சருமத்தில் வெல்லம் பயன்படுத்தலாம் தெரியுமா? முகம் பொலிவாக இருக்க இதை செய்யுங்கள்! | Beauty Benefits Of Applying Jaggery On Face

மேலும், வெல்லத்தில் ஈரப்பதமூட்டும் பண்புகள் நிறைந்துள்ளது. இது சருமத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கும். இது தவிர முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளை சரி செய்யும்.

வெல்லத்தில் ஃபேஸ்பேக்

வெல்லம் மற்றும் கடலை மாவு: இந்த ஃபேஸ் பேக் செய்ய ஒரு ஸ்பூன் வெல்லத்தில், ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து,

சருமத்தில் வெல்லம் பயன்படுத்தலாம் தெரியுமா? முகம் பொலிவாக இருக்க இதை செய்யுங்கள்! | Beauty Benefits Of Applying Jaggery On Face

அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள்.

வெல்லத்தில் ஸ்க்ரப்

இதற்கு ஒரு ஸ்பூன் வெல்லத்தில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு நன்கு கலக்கி அதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.

சருமத்தில் வெல்லம் பயன்படுத்தலாம் தெரியுமா? முகம் பொலிவாக இருக்க இதை செய்யுங்கள்! | Beauty Benefits Of Applying Jaggery On Face

பிறகு அதை 5 நிமிடம் நன்கு காய வைத்து முகத்தை கழுவுங்கள்.