மிகவும் அழகான பெண் பைக்கர்-க்கு நேர்ந்த விபரீதம்; விபத்தில் பலி - கதறும் ரசிகர்கள்!
ரஷ்யாவின் மிகவும் அழகான பைக்கர் என்று அழைக்கப்படும் ஓசோலினா உயிரிழந்தார்.
அழகான பைக்கர்
பைக் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பைக்கர் தான் "மோட்டோ தான்யா". 38 வயதான இவரை ரஷ்யாவின் அழகான பைக்கர் என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் கூறுவதுண்டு. இந்த நிலையில் இவர் துருக்கி நாட்டில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அவர் துருக்கியில் தனது சிவப்பு நிற பிஎம்டபிள்யூ பைக்கை ஒட்டிச் சென்றபோது, எதிர்பாராத விதமாக டிரக் ஒன்றில் மோதியதில் அவர் உயிரிழந்தார். சமூக வலைத்தளத்தில் "மோட்டோ தான்யா" என்று அழைக்கப்படும் இந்த பெண்ணின் உண்மையான பெயர் டாட்டியானா ஓசோலினா..
விபத்தில் பலி
இவர் துருக்கியின் முகலாவில் இருந்து போட்ரம் என்ற இடத்திற்குத் தனது சிவப்பு நிற BMW S1000RR 2015 பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது வழியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவரது பைக் அருகே வந்த டிரக் ஒன்றின் மீது மோதி இருக்கிறது.
இது குறித்து தகவலறிந்த உடனேயே ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. ஆனால் அதற்குள் அதற்கு ஓசோலினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவருடன் பயணித்த துருக்கி நாட்டை சேர்ந்த பைக்கர், ஒனூர் ஒபுட் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். அவர் இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோசமான விபத்து தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.