நாயை விட கேவலமா நடத்துறாங்க.. 4 மணிநேரம் பியூட்டிசியனை அறையில் அடைத்து கொடுமை - கதறும் பெண்!

Tamil nadu Chennai Crime
By Vinothini Oct 25, 2023 11:04 AM GMT
Report

பியூட்டிசியன் பெண்ணை அறைக்குள் அடைத்து கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் நிறுவனம்

சென்னை, தி நகரில் இருந்து அர்பன் கம்பெனிக்கு அழகு கலை சேவைக்காக புக் செய்யப்பட்டது. இதனால் அந்த கம்பெனி சார்பில் பெண் ஒருவர் சென்றார். அப்போது அவர் அந்த வீட்டு பெண்ணுக்கு தேவையான வேக்சிங், பெடிகியூர், ஐ ப்ரோ டிரிம்மிங் ஆகிய 3 சர்வீஸ்களை செய்துவிட்டு, அதற்கான தொகை மொத்தம் ரூ. 1175 கேட்டுள்ளார்.

beautician-house-arrested-at-tnagar-for-4-hours

அப்பொழுது வாடிக்கையாளர் தர மறுத்து அவரை ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். இது குறித்து அந்த பியூட்டிசியன் கூறுகையில், "நீ ஐ ப்ரோவை சரியாக டிரிம்மிங் செய்யவில்லை என பிரச்சினை செய்தார்.

நானும் சரி ஐ ப்ரோவுக்கு மட்டும் காசை கழித்துக் கொண்டு மீதம் செய்த சேவைகளுக்கு காசு கொடுங்கள் என கேட்டேன். தர முடியாது என சொன்னார். அத்துடன் என்னை அவதூறாக அசிங்கமாக பேசத் தொடங்கினார்" என்றார்.

நண்பரை நம்பி சென்ற கல்லூரி மாணவி.. சீரழித்த சினிமா உதவி இயக்குனர் - அதிர்ச்சி!

நண்பரை நம்பி சென்ற கல்லூரி மாணவி.. சீரழித்த சினிமா உதவி இயக்குனர் - அதிர்ச்சி!

பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

இதனை தொடர்ந்து, அவர் கூறுகையில், "உடனே அங்கு அந்த பெண்ணின் கணவர் வந்தார். அவர் வந்து கதவை மூடிவிட்டார். நானும் சார் உங்கள் மனைவியின் ஐ ப்ரோவை பாருங்கள். ஏதாவது தவறிருந்தால் என் மீது புகார் செய்யுங்கள் என சொன்னேன். இதற்கே நான் எதிர்த்து பேசுவதாக கூறி என்னை தள்ளிவிட்டனர். நான் கீழே விழுந்துவிட்டேன். 100க்கு போன் செய்தேன், லைன் கிடைக்கவில்லை.

beautician-house-arrested-at-tnagar-for-4-hours

நிறுவனத்திற்கு கால் செய்தேன். எல்லார் எண்ணும் ஸ்விட்ச் ஆப். உடனே என் தோழிக்கு போன் செய்தேன். அவர் போலீஸுக்கு போன் செய்வதாக சொன்னார், அதன்பிறகுதான் கதவையே திறந்தார்கள். பிறகு போலீஸார் வந்து என்னை வெளியே அழைத்து வந்தார்கள். அவர்களிடம் ஆன்லைனில் பணம் தருவதாக கூறினர்.

இது பற்றி நிறுவனத்திடம் கூறினால் அவர்கள் வாடிக்கையாளர்களை தான் நம்புவர். நாய்க்கு கூட மரியாதை தருவாங்க எங்களை மதிப்பதே இல்ல. இது போல் நிறைய பேர் வேலை செய்யும் வரை அமைதியாக இருப்பார்கள்.

பேமன்ட் என கேட்டால் இப்படித்தான் ரூடாக நடந்து கொள்வார்கள். எங்களுக்கு பாதுகாப்பே இல்லை" என்று தனது வேதனையை கூறியுள்ளார்.