இருட்டில் ஆணும், பெண்ணும் உட்கார கூடாதா? பீச்சில் போலீஸிடம் எகிறிய பெண்!
போலீஸாருடன் பெண் ஒருவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெண் வாக்குவாதம்
சென்னை, மெரினா பீச்சில் பாதுகாப்புக்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். சம்பவத்தன்று, மணலில் ஆண் -பெண் இருவர் உட்காந்திருத்துள்ளனர்.
அவர்களிடம் சென்ற ஒரு போலீஸ்காரர், 'நீங்கள் கணவன் மனைவியா, ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்' என்று கேள்வி கேட்டுள்ளார். உடனே அந்த பெண் தன்னுடைய செல்போனில் வீடியோவை ஆன் செய்துவிட்டு, "முதல்ல கணவன், மனைவியான்னு ஏன் சார் கேட்டீங்க? எங்களை ஏன் சார் அப்படி கேட்டீங்க?
பணியிடை மாற்றம்
2 பேர் உட்கார்ந்திருக்காங்கன்னா, கணவன் மனைவியான்னுதான் கேட்பீங்களா? லவ்வர்ஸான்னு கேட்கிறீங்க? இப்படி உங்களை கேட்கணும்னு டிப்பார்ட்மென்ட்டில சொல்லி தந்தாங்களா? ஆணும், பெண்ணும் பீச்சில் தனியா உட்கார கூடாதுன்னு சட்டம் ஏதாவது இருக்கா? அப்படி கேட்கக்கூடாது சார். அது அநாகரீகமான விஷயம். பீச்சில கணவன், மனைவி மட்டும்தான் உட்காரணும்னு அவசியம் கிடையாது. லவ்வரா இருக்கணும்னு அவசியம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
அதற்கு போலீஸ்காரர், "நான் உங்க கிட்ட ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். தனியாக இருப்பவர்களை எப்படி டீல் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். பீச்சில் 2 பேர் உட்காருவது தப்பு, யாருமில்லாத நேரத்தில் தனியாக உட்காருவது தப்பு. இப்படி இருட்டுல உட்காருவது தப்பு" என்கிறார்.
அதற்கு அந்த பெண், "நைட் நேரத்தில் எங்கே சார் நாங்கள் உட்கார்திருந்தோம்? இங்கே ஏதாவது அநாகரீகமாக நடந்ததை நீங்க பார்த்தீங்களா?" கூறுகிறார். தொடர்ந்து வாக்குவாதம் நீள்கிறது. இந்நிலையில் பீச்சில் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீஸ்காரரை, கமிஷனர் அருண் தற்போது டிரான்ஸ்பர் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.