மக்களே உஷார்.. தீபாவளிக்கு ஆன்லைனில் பட்டாசு ஆர்டர் பன்னபோறீங்களா? இதை கவனீங்க!
பட்டாசுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
பட்டாசு ஆர்டர்
இந்த காலக்கட்டத்தில் ஆன்லைனில் பெரும்பாலான பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. அந்த வகையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள இந்த சமயத்தில் பட்டசுகளை வாங்கி மக்கள் குவித்து கொண்டு உள்ளனர்.
அதற்கேற்ப பல்வேறு பட்டாசு விற்பனை நிறுவனங்களும் ஆன்லைனில் ஆர்டர்களை பெற்று விற்பனையில் ஈடுபடத் தொடங்கி உள்ளன. அதில் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் போட்டி போட்டு ஆன்லைனில் பணத்தை செலுத்தி விட்டு பட்டாசு பார்சல்களுக்காக காத்திருக்கிறார்கள்.
ஆனால் இதை பயன்படுத்தி மோசடி பேர்வழிகள் ஆன்லைனில் ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் வலை விரித்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். போலியான பெயர்களில் பட்டாசு விற்பனை நிறுவனங்கள் மற்றும் இணையதள முகவரிகளை தொடங்கி ஆன்லைனில்
மக்களே உஷார்..
பணத்தை வாங்கிவிட்டு பட்டாசுகளை அனுப்பாமல் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. எனவே மக்கள் உஷாராக இருக்கவேண்டும் என பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைனில் சில்லரை விலையில் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு ஏற்கனவே கோர்ட்டு தடை விதித்துள்ளது. அதை மீறி ஆன்லைனில் பட்டாசு விற்பனை அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.
இதனை பயன்படுத்தித் தான் ஆன்லைனில் மோசடி கும்பல் ஏமாற்றுவதற்கு திட்டம் போட்டு செயல்பட்டு வருகிறது. எனவே பட்டாசுகளை ஆர்டர் செய்து வாங்கும் போது மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.