நடராஜனை எடுக்க மாட்டாங்க; ஒதுக்கி வைத்த பிசிசிஐ - இதனால் தான்.?
உலகக் கோப்பை தொடரில் நடராஜன் தேர்வு செய்யப்படாதது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
நடராஜன்
தமிழகத்தை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் முதல் இடத்தில் உள்ளார்.
8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்களை வீழ்த்தி நிலையிலும் இந்திய அணியில் இடம்கிடைக்கவில்லை. ஆனால், இது குறித்து தேர்வு குழுவினரோ, கேப்டன் ரோகித் சர்மாவோ வாய் திறக்கவில்லை.
டி20 உலகக்கோப்பை?
காயத்தை காரணம் காட்டி இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தாலும், பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி உள்ளிட்ட வீரர்களுக்கு காயத்தின் பின்பும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனை வைத்து பார்த்தால் நடராஜனுக்கு இந்திய அணியில் வேண்டுமென்றே வழங்கப்படவில்லை என்று ரசிகர்கள் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தற்போது நடராஜன் யார்கர் பந்துகளை துல்லியமாக வீசி வருகிறார். அதன் காரணமாக அவரை 2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என பல முன்னாள் முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.