5 கோப்பைகள்; CSK பயிற்சியாளரை குறிவைக்கும் BCCI? ஆஹா.. விஷயம் அப்படி போகுதா!
ஸ்டீபன் பிளெம்மிங்கை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கும் எண்ணத்தில் பிசிசிஐ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயிற்சியாளர்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். இவரின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது.
இதனால் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெம்மிங் இருந்து வருகிறார்.
ஸ்டீபன் பிளெம்மிங்
இவரை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஏற்கனவே ஸ்டீபன் பிளெம்மிங்கிடம் பிசிசிஐ சார்பில் பேசப்பட்டதாகவும், ஆனால் அவர் அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஸ்டீபன் பிளெமிங் கடந்த 2009-ம் ஆண்டுமுதல் சிஎஸ்கே அணிக்காக பணியாற்றி 5 முறை ஐபிஎல் கோப்பை மற்றும் 2 முறை சாம்பியன் லீக் கோப்பைக்கு அழைத்துச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.