T20: இந்திய அணியில் மாற்றம்? பிசிசிஐ முக்கிய முடிவு!
டி20 உலகக்கோப்பை தொடங்க இருக்கும் நிலையில், இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை
பாகிஸ்தான், இஅலங்கை, மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் அடுத்தடுத்து இந்தியா தோல்வியை சந்தித்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. பேட்டிங்கில் வலுவாக இருக்கும் இந்திய அணி,
பந்துவீச்சில் சரியான காம்போ இல்லாமல் தடுமாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், அதிகபட்சமாக ஹார்திக் பாண்டியா 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தொடர் தோல்வி
மேலும் ராகுல் 55 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மீதமுள்ளவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மூத்த பவுலரான புவனேஷ்வர் குமார் தொடர்ந்து 3வது முறையாக சொதப்பி இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான வீரராக மாறியிருக்கிறார்.
உமேஷ் யாதவ், பந்துவீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் அழகாக எதிர்கொண்டு பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். இதனால் வேகப்பந்து வீச்சு கூட்டணியை மாற்றியமைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ முடிவு!
அதன்படி, ஆஸ்திரேலிய தொடர் முடிந்தவுடன் வீரர்களின் செயல்திறன் அடிப்படையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுக்க உள்ளது.