இந்திய அணி தோல்விக்கு இவர்கள் தான் முக்கிய காரணம் - ரோஹித் சர்மா

Hardik Pandya Rohit Sharma Sri Lanka Cricket Indian Cricket Team Asia Cup 2022
By Thahir 3 மாதங்கள் முன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

சொதப்பிய இந்தியா அணி 

கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணி தோல்விக்கு இவர்கள் தான் முக்கிய காரணம் - ரோஹித் சர்மா | They Are The Main Reason For The Defeat Rohit

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 72 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 34 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி தோல்விக்கு இவர்கள் தான் முக்கிய காரணம் - ரோஹித் சர்மா | They Are The Main Reason For The Defeat Rohit

இலங்கை அணி அபார வெற்றி 

இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். சிறப்பான தொடக்கம் அளித்த இரு வீரர்களும் அரைசதம் கடந்தனர். நிசங்கா 52 ரன்னில் வெளியேறினார்.

அடுத்துவந்த அசலங்கா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய குனதிலகா 1 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய மெண்டிஸ் 57 ரன்கள் குவித்தார்.

இந்திய அணி தோல்விக்கு இவர்கள் தான் முக்கிய காரணம் - ரோஹித் சர்மா | They Are The Main Reason For The Defeat Rohit

இறுதியில், 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 174 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றிபெற்றது.

தோல்விக்கு இவர்கள் தான் காரணம் 

“பேட்டிங்கில் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் இன்னும் 10 – 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை.

இந்திய அணி தோல்விக்கு இவர்கள் தான் முக்கிய காரணம் - ரோஹித் சர்மா | They Are The Main Reason For The Defeat Rohit

பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய வீரர்கள் (ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா) தங்களது விக்கெட்டை எப்படி இழந்தனர், எந்த மாதிரி ஷாட் அடித்து விக்கெட்டை இழந்தனர் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்று தோல்விகள் இயல்பானது தான், ஆனால் எங்களை விட இந்த போட்டியில் இலங்கை அணியே சிறப்பாக விளையாடியது. இது போன்ற போட்டிகள் நிறைய விசயங்களை கற்று கொடுக்கும், நமது பலவீனங்களை இது போன்ற போட்டிகளே கற்று கொடுக்கும். எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்,

ஆவேஸ் கான் காயமடைந்துள்ளதும் எங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. தோல்விகளுக்கான காரணம் என்ன என்பதை நான் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கான விடையை தேடி வருகிறேன்” என்று தெரிவித்தார்.