தோனிக்காக கொண்டு வரப்பட்ட புதிய ரூல் - குஷியில் சிஎஸ்கே..உண்மை என்ன?
ஐபிஎல் தொடரில் தோனிக்காக புதிய ரூல் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய ரூல்
ஐபிஎல் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் சிஎஸ்கே அணி தரப்பில் ஒரு கோரிக்கை மட்டுமே தீவிரமாக வலியுறுத்தப்பட்டது. அதாவது 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்திய அணிக்கு விளையாடாத வீரர்களை அன்-கேப்டு வீரர்களாக கருதி ரீ-டெய்ன் செய்யலாம்,
என்று விதியை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதாவது 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வை அறிவித்து தற்போது 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்றுவரை அவர் விளையாடக்கூடிய ஃபிட்னஸ் உடன் இருக்கிறார்.
ஆனால் தோனியால் 3 சீசன்கள் விளையாட முடியுமா என்பது சந்தேகம் தான். இதனால் ஒரேயொரு சீசனில் சிறிய தொகைக்கு தக்க வைக்க முடிந்தால் மட்டும் என்னை தக்க வைக்கலாம் என்று சிஎஸ்கே நிர்வாகத்திடம் தோனி பேசியுள்ளார்.
உண்மை என்ன?
ஐபிஎல் தொடரில் இந்திய அணிக்கு அறிமுகமாகாத வீரர்களை ரூ.4 கோடிக்கு தக்க வைக்க முடியும். இதனால் தோனியை இளம் வீரராக கருதி சிறிய தொகைக்கு தக்க வைக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது.
தற்போது ஐபிஎல் நிர்வாகக் குழு மற்றும் பிசிசிஐ தரப்பில் சிஎஸ்கேவின் கோரிக்கைக்கு இசைவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், சிஎஸ்கே அணிக்காக புதிய விதியை பிசிசிஐ கொண்டு வந்ததாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்த விதி 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதில் இருந்தே இருந்து வருகிறது. கடைசியாக 2022ஆம் ஆண்டு மெகா ஏலம் முன்பாக இந்த விதி ரத்து செய்யப்பட்டது. இதுவரை எந்த அணியும்,
இந்த விதிகளை பயன்படுத்தி யாரையும் தக்க வைக்கவில்லை. தற்போது முதல்முறையாக சிஎஸ்கே அணி தோனிக்காக பயன்படுத்த இருப்பதால், விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
