அந்த மாநில வீரர்கள் போல் தமிழக வீரர்களுக்கு ஆதரவு இல்லை; ஏன் பாரபட்சம்? கொதித்த பத்ரிநாத்!
தமிழக வீரர்கள் மீது பிசிசிஐ பாரபட்சம் காட்டுவதாக இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழக வீரர்கள்
நடப்பாண்டின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதனை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன. இந்த தொடரில் 20 அணிகள் கலந்து கொண்டு போட்டியிடுகின்றனர். இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், சிவம் துபே, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், பும்ரா போன்ற முன்னணி வீரர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஒரு தமிழக வீரருக்கு கூட வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் பெருமான் எப்பற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் பாரபட்சம்?
குறிப்பாக தற்போது நடந்து வருகின்ற ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வரும் தமிழக வீரரான நடராஜன், தினேஷ் கார்த்திக், சாய் சுதர்சன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெறவில்லை. இந்த இந்திய அணியின் தேர்வை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
அவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இருமடங்கு சிறப்பாக விளையாடி தங்களை நிரூபித்தால் மட்டுமே அணியில் இடம் கொடுப்போம் என்ற பாரபட்சம் ஏன்?. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இடம்பெற்றிருக்க வேண்டும்.
பிற மாநில வீரர்களைப் போல தமிழ்நாட்டு வீரர்களுக்கு ஏன் கூடுதல் ஆதரவு கிடைப்பதில்லை?. இந்த சூழலை பலமுறை நான் எதிர்கொண்டுள்ளேன். இதனை யாரும் வெளிப்படுத்துவதில்லை என்பதால் நான் பேசுகிறேன். இவ்வாறு விமர்சித்துள்ளார்.