T 20 உலகக்கோப்பை - 125 கோடி பரிசு மழையில் நனையும் இந்திய அணி

Indian Cricket Team Team India T20 World Cup 2024
By Karthikraja Jul 01, 2024 04:19 AM GMT
Report

T20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவித்துள்ளது பிசிசிஐ.

T20 உலக கோப்பை

சனிக்கிழமை நடந்த T 20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

jai shah india team

கடைசியாக 2011 ஆம் ஆண்டு தோணி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்து கோப்பை வென்றதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியமும் வீரர்களுக்கு பரிசு தொகை அறிவித்து உள்ளது. 

T20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு கவலையடைந்த விராட் கோலி மகள் - அனுஷ்கா ஷர்மா நெகிழ்ச்சி பதிவு

T20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு கவலையடைந்த விராட் கோலி மகள் - அனுஷ்கா ஷர்மா நெகிழ்ச்சி பதிவு

பிசிசிஐ

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள பிசிசிஐ செயலாளர் “2024 ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே கோப்பை வென்றதற்காக இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலர் (ரூ. 20.42 கோடி) போட்டிப் பரிசுத் தொகையாகப் பெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு அப்போதைய பிசிசிஐ தலைமை, ஒரு வீரருக்கு தலா இரண்டு கோடி என பரிசு வழங்கியது. பயிற்சியாளர்களுக்கு தனியாக 50 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.