முஸ்லிமாக மாறியவர்களுக்கு BC சான்றிதழ் - தமிழ்நாடு அரசு அரசாணை
முஸ்லிமாக மாறியவர்களுக்கு BC சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
BC சான்றிதழ்
தமிழகத்தில், 2012 வரை பிற மதங்களில் இருந்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள், இஸ்லாம் மதத்திற்கு மாறினால்

அவர்கள் ஏற்கனவே பெற்ற ஜாதி சான்றிதழ் மாற்றப்பட்டு முஸ்லிம் ராவுத்தர் அல்லது லப்பை என்ற புதிய ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன்படி, அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உரிமை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, 2012க்குப் பின் இந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், முஸ்லிமாக மதம் மாறிய, பி.சி., - எம்.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்தவர்களை, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினராகக் கருதி, ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்திய வண்ணம் இருந்தன.
அரசாணை வெளியீடு
இந்நிலையில், இதுதொடர்பாக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், ”இஸ்லாமியர்களாக மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அறிவிக்கப்படாத சமூகங்கள் மற்றும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த முஸ்லிம்களாக கருத வேண்டும்.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிற பிரிவை சேர்ந்தவர்கள் 3.5 % இடஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்.
பிசிஎம் என சாதி சான்றிதழ் வழங்கும் போது உரிய வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு வருவாய் நிர்வாக ஆணையருக்கு அறிவுறுத்த வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்காமல் பிரதேச செயலகத்தில் கிடந்த கோடிக்கணக்கான உணவுப் பொருட்கள் IBC Tamil